பட்ஜெட் அறிவிப்பால் எகிறிய டிமெண்ட்.. இந்த தொழிலை தொடங்கினால் லட்சங்களில் லாபம் சம்பாதிக்கலாம்

என்னதான் மக்கள் ஓடோடி சம்பாதித்தாலும், சொந்தமாக தொழில் செய்வதற்கு ஈடாகாது. அப்படி சொந்தமாக தொழில் செய்வது குறித்து இதில் பார்க்கலாம். தொழில் செய்ய ஆர்வம் இருப்பவர்கள், எப்படி தொழில் செய்யலாம், எந்த தொழிலில் அதிக லாபம் என்பதில் குழப்பம் அடைவார்கள். இவர்களுக்கு தெளிவூட்டும் வகையில் இந்த பதிவு இருக்கும். பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதர பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2 கோடி வீடுகள் கட்டிதரப்படும் என உறுதியளித்தார். இதன் மூலம் அடுத்து வரும் ஆண்டுகளில் கட்டிட தொழிலுக்கு டிமாண்ட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த தொழில் தொடங்கினால், நீங்கள் இரட்டிப்பு லாபம் பெற முடியும்.
என்னென்ன பொருட்கள் வேண்டும்?
கட்டிட தொழிலுக்கு தேவையான சிமெண்ட், மணல் என அனைத்தையும் வாங்கி வைத்து கொள்ள வேண்டும். உங்களிடம் போதிய இட வசதியுடன் கூடிய ஒரு கடை இருந்தால் போதும், நீங்கள் இந்த பொருட்களை எளிதாக சேமிக்கலாம். சிமெண்ட் எளிதில் ஈரமாகி விடும் என்பதால், அதனை பத்திரமாக வைக்க வேண்டும்.
எவ்வளவு பணம் தேவை?
சிறிய அளவிலான கட்டிட பொருட்கள் தொழிலை தொடங்கினாலும் ஆரம்ப முதலீடாக ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். உங்களிடம் சொந்த நிதி இல்லை என்றால், வங்கியில் கடன் பெற்று தொழிலை தொடங்கலாம்.
தொழில் தொடங்க என்ன செய்ய வேண்டும்?
ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன்பு நீங்கள் உங்கள் நகர அதிகாரிகளிடமிருந்து கட்டிட பொருள் வணிக உரிமத்தை பெற்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இது தவிர MSME நிறுவனத்திடமிருந்தும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
எவ்வளவு லாபம் கிடைக்கும்?
கட்டிட பொருட்கள் வியாபாரத்தில் 30 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. நீங்கள் ஒவ்வொரு மாதமும் எளிதாக ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம். இதே தொழிலை அதிக முதலீடு போட்டு பெரிய அளவில் தொடங்கினால், நீங்கள் தினசரி ரூ.20 – 30 ஆயிரம் கிடைக்கும்.