Dental Health: தினமும் இருமுறை பல் விளக்கினால் என்ன ஆகும்? இதையும் தெரிஞ்சுக்கோங்க!
தினந்தோறும் இருமுறை பற்களை விலக்குவது மட்டும் போதுமானதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். பற்களை ஆரோக்கியமாக பாதுகாப்பதில் வைட்டமின்களின் பங்கு மிக அதிகமான ஒன்று. உயிருள்ள அமைப்பான பற்களை பாதுகாத்துக் கொள்ளவும், அவை மறு உற்பத்தி செய்யவும், ஆரோக்கியமாக இருக்கவும், பல் எனாமலை தகவமைத்துக் கொள்ளவும் ஊட்டச்சத்துகள் அவசியம்.போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்காவிட்டால் பற்களின் ஆரோக்கியம் கெட்டுப்போய்விடும்.
பற்களில் துளைகள் ஏற்பட்டு அவை உடைவதற்கும், கெட்டுப்போவதற்கும் காரணமாக உள்ளது சர்க்கரை மட்டுமல்ல. போதுமான அளவில் ஊட்டச்சத்துகள் கிடைக்காததும் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆரோக்கியமான பற்களை பெற 4 முக்கிய வைட்டமின்கள் அவசியம், அந்த வைட்டமின்கள் அடங்கியுள்ள சில முக்கிய உணவுப் பொருட்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
வைட்டமின் A : கேரட்டில் பீட்டா கரோட்டீன்கள் நிறைந்து காணப்படுகிறது. அரை கப் பச்சை கேரட்டில் 459 mcg அளவிற்கு வைட்டமின் ஏ காணப்படுகிறது. கேரட்டில் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
வைட்டமின் D : கொழுத்த மீன், காளான், பால், சூரிய ஒளியில் வைட்டமின் “டி” அதிக அளவில் உள்ளது. மூளை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின் டி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான இந்த வைட்டமின், நோய்த்தொற்றுகளைக் குறைக்கிறது பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வைட்டமின் டி, போதுமான அளவு இல்லை என்றால், பற்களின் வலிமை குறைந்துபோகும். பல் உடையும் வாய்ப்புகள் அதிகரிக்கும். வைட்டமின் டி, சூரிய ஒளியில் அதிக அளவு உள்ளது. தினசரி வெளிச்சத்தில் அதிக நேரம் செலவிடுவது உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க உதவுகிறது. காளான்களில் வைட்டமின் டி அபரிதமாக உள்ளது.
வைட்டமின் K2 : வைட்டமின் கே 2 என்பது வைட்டமின் கே 1 ஐ காட்டிலும் மிக குறைவான உணவுகளில் உள்ளது. இது மிகவும் முக்கியமானது உடலில் பலவகையான சுகாதார விளைவுகளை கொண்டுள்ளது.