3 முக்கிய திட்டங்களை அறிவித்திருந்தாலும்! ரயில்வே துறை சார்ந்த பங்குகள் சரிவு! ஏன் என்னாச்சு?

டெல்லி: 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தவுடன் ரயில்வே துறை சார்ந்த பங்குகள் சரிந்தன.
2024ஆம் ஆண்டுடன் பாஜக தலைமையிலான நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்.
இந்த நிலையில் இன்றைய தினம் இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2024 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து எந்த கட்சி ஆட்சியை பிடிக்கிறதோ அந்த ஆட்சி சார்பில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இன்றைய இடைக்கால பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் ரயில்வே துறை சார்ந்த திட்டங்களை அறிவித்திருந்தார். அவர் தனது உரையில் கூறியிருப்பதாவது: 40 ஆயிரம் சாதாரண ரயில்களின் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகளும் நமோ பாரத் என்ற சேவைகளும் விரிவுப்படுத்தப்படும் என்றார்.
அத்துடன் முக்கிய பொருளாதார ரயில்வே வழித்தட திட்டங்களையும் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன்படி எரிசக்தி வழித்தடங்கள், கனிம வளம் வழித்தடங்கள், சிமென்ட் வழித்தடங்கள், துறைமுக இணைப்புக்கான வழித்தடங்கள், அதிக போக்குவரத்து வழித்தடங்கள் உள்ளிட்டவை அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.