சீனாவின் அச்சுறுத்தலை மீறி தாய்வானில் ஜனாதிபதி தேர்தல்… வாக்கெடுப்பு ஆரம்பம்
சீனாவின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இன்று தாய்வானில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.
தாய்வானில் அமைக்கப்பட்டுள்ள 17 ஆயிரத்து 795 வாக்கெடுப்பு நிலையங்களில், சுமார் 19.5 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பு இன்று மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த தேர்தல் வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
ஜனநாயக முற்போக்கு கட்சியின் லாய், குவோ மின் டாங் கட்சியின் ஊ யூ ஹி (Hou Yu-ih) மற்றும் தாய்வான் மக்கள் கட்சியின் கோ வென்-ஜே ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தேர்தல் சட்டங்கள் தாய்வானில் கடுமையாக பின்பற்றப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாக்காளர்களின் நேர்மையை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் படங்கள் அல்லது காணொளிகளை பதிவு செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.