பிரேசில் நாட்டில் மோசமடையும் காலநிலை : 20 பேர் பலி
பிரேசிலில் நாட்டின் மிமோசா டோவுல் பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையால் தற்போது வரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளன.
மேலும் வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர் பிரேசில் நாட்டின்ன ரியோ டி ஜெனிரோ மற்றும் எஸ்பிரிட்டோ மாநிலங்களை புயல் தாக்கியதையடுத்து சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் மலைப்பகுதிகள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் ஆறுகளில் வெள்ளம் பெருக்கு மற்றும் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
சிறுமி மீட்பு
இந்த மண்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. இந்நிலையில் மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருவதாக மீட்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இடிபாடுகளில் இருந்து 16 மணி நேரத்துக்கு பிறகு ஒரு சிறுமியை பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அந்த சிறுமியின் தந்தை மகளை காப்பாற்றிவிட்டு அருகிலேயே இறந்துள்ளதாகவும் கிடந்தார் மீட்பு படையினர் தெரிவத்துள்ளனர்.