பக்தர்கள் அதிர்ச்சி..! சபரிமலை கோவிலில் 10-ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தம்..!
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த ஆண்டு நடை திறக்கப்பட்டது முதலே வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சபரிமலையில் தரிசனம் செய்தனர்.
பம்பை முதல் சன்னிதானம் வரை 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். கூட்டத்தை சமாளிக்க இரு முடியோடு 18-ம் படியேறும் பக்தர்களை மணிக்கு ஐந்தாயிரம் பேரை கடத்தி விடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளன. பக்தர்கள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து பக்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்நிலையில், சபரிமலை வரும் பக்தர்கள் அங்கேயே ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்வது வரும் 10-ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு ஜோதியின்போது கூட்ட நெரிசலை தவிர்க்க திருவாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உடனடி முன்பதிவை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 14, 15-ம் தேதிகளில் பக்தர்கள் முன்பதிவு எண்ணிக்கையை கட்டுப்படுத்த பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, வரும் 14- ம் தேதிக்கான முன்பதிவு 50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.