தைப்பூசத்தில் பக்தர்கள் முருக பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் முருக பெருமானுக்கு சூரனை வதம் செய்ய வேலாயுத்ததை தேவி உமையாள வழங்கியதாக கூறுகிறது ஸ்கந்த புராணம்.
முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.
போர் தெய்வமான கொற்றவையின் அருள் பெற்ற முருகபெருமான் என திருமுருகாற்றுப்படையில் முருக பெருமானை ‘கொற்றவை மைந்த’ என குறிப்பிடுகிறார் நக்கீரனார். அவ்வாறு போர் குணம் கொண்ட வீர திருமகனாக விளங்கும் முருக பெருமான் எதிரிகளையும், துஷ்ட சக்திகளை நிர்மூலம் செய்யும் வேலை தனது ஆயுதமாக கொண்டு அருள் பாலிக்கிறார்.
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.
சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.