கோவையில் வள்ளி கும்மி நடனம் ஆடி அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள்..!

கோவையில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் சிறப்பு இரயிலுக்கு காத்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு கோவை ரயில் நடைமேடையில் வள்ளி கும்மி நடனம் ஆடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
கோவையிலிருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு சிறப்பு ரயில் நேற்றிரவு புறப்பட்டது. அதில் பயணம் செய்வதற்கு கோவை, நீலகிரி, திருப்பூர் போன்ற மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்திருந்தனர். ரயில் வருவதற்கு காத்திருந்த பக்தர்கள் , கொங்கு மண்டலத்திலன் புகழ் பெற்ற வள்ளி கும்மி நடனமாடினர்.
அந்த வீடியோகாட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி, உத்தர பிரதேசம் அயோத்தியில் சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ராமர் கோயில் சாமி தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் அய்யோதி ராமர் கோயிலுக்கு செல்ல மிகுந்த ஆர்வம் காட்டி வரும் நிலையில் சிறப்பு ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.