தம்மாதூண்டு விதை.. ஒரே ஆச்சர்யம்.. சிறுநீரகம் முதல் கல்லீரல் வரை காக்கும் கருப்பு விதைகள்.. கவனியுங்க
இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பார்கள்.. இளைப்பு என்றால் களைப்பு என்று பொருள்.. களைப்பு உட்பட பல்வேறு தொந்தரவுகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால், பலன் பெறுவார்கள்.. உடலுக்கும் ஊக்கம் கொடுக்கும் என்பதே இதன் அர்த்தம்
எள் விதைகள் எள் செடியின் இலைகள், பூக்கள், காய்கள், விதைகள் என அனைத்துமே மருத்துவ சக்தி கொண்டது.. கருப்பு, சிவப்பு, வெள்ளை என நிறங்களில் எள் இருந்தாலும், பயன்கள் என்னவோ அனைத்திலும் ஒரே மாதிரிதான். கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகம் என்றால், வெள்ளை, சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைய உள்ளது.. அதனால், எந்த எள்ளாக இருந்தாலும், தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால் நிறைய பலன்களை பெறலாம்.
மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் B, E, இரும்புச்சத்து, ஜிங்க், புரதச்சத்து இப்படி பல்வேறு சத்துக்கள் எள்ளில் உண்டு. குறிப்பாக, ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்து, ஒரு கைப்பிடி எள்ளில் இருக்கிறதாம்.. இந்த கால்சியம் சத்துக்கள்தான், பற்களுக்கும், எலும்புகளை உறுதிப்படுத்துவதற்கும் பேருதவி புரிகிறது.. மூட்டுகளிலுள்ள ஜவ்வுகளுக்கு பலத்தை தருவது இந்த கால்சியம் சத்துக்கள்தான்.
எண்ணெய்கள்: எள்ளில் நிறைந்துள்ள எண்ணெய்கள், நம்முடைய சருமத்துக்கு கவசம் போல பாதுகாப்பை தரக்கூடியவை.. புண்கள், சொறி, சிரங்கு, போன்ற பாதிப்புகளை நீக்கக்கூடிய தன்மை இந்த எள் எண்ணெய்களுக்கு உண்டு. மேலும், சரும வறட்சியை நீக்கி, பொலிவை தரக்கூடியது..கழிவுகள்: இந்த எள் விதைகளை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள கழிவுகள் வெளியேறிவிடும். இதனால் குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. எள்ளு விதையை லேசாக வறுத்து தூளாக்கி, நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், மூலநோய்க்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும். அல்லது எள் இலைகளுடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டாலும், ரத்த மூலநோய் குணமாகும்
.அந்தவகையில், இந்த எள் செடியின் இலைகளும் மருத்துவ சக்தி நிறைந்தது.. இந்த இலைகளை தண்ணீரில் சேர்த்து பிழிந்து சாறு எடுத்து, முகம் கழுவினால், கண் நரம்புகள் உறுதியாகும்.. முகம் பொலிவுபெறும். அல்லது இந்த இலைகளை கசாயம் போல வைத்து குடிக்கலாம்..
மாதவிடாய்: உடல் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெற இந்த எள் துணைபுரிகிறது.. படபடப்பு தன்மையை குறைத்து, மனதை சாந்தப்படுத்தும் தன்மை எள் விதைகளுக்கு உண்டு.சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் இருந்தால், எள் விதைகள் இவைகளை போக்குகின்றன.. எள் சாப்பிட்டு வரும்போது, சிறுநீர் தாராளமாக பிரியும்.. அதேபோல, சிறுநீரகங்களின் கற்கள் ஏற்படுவதையும் தடுக்கும் தன்மை எள் விதைகளுக்கு உண்டு.