சிவகார்த்திகேயனை வீழ்த்திய தனுஷ்: கேப்டன் மில்லர் முதல் நாள் வசூல் நிலவரம்
பொங்கல் தினத்தை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள அயலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ராக்கி, சாணி காகிதம் படங்களில் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் கேப்டன் மில்லர். தனுஷ், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் நேற்று (ஜனவரி 12) வெளியானது.
காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டீவ் விமர்சனங்கள் எழுந்ததால், படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலம் வேலை நாள் வெளியான போதிலும், ‘கேப்டன் மில்லர்’ முதல் நாளில் சராசரியாக 80% ஆக்கிரமிப்பைப் பெற்றுள்ளது. இதனால் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 13 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில், ‘கேப்டன் மில்லர்’ முதல் நாளில் ரூ 6 முதல் 6.5 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால், முதல் நாள் கர்நாடகா பாக்ஸ் ஆபிஸில் படம் சூப்பர் பவர்ஃபுல்லாக இருந்தது. வெளிநாடுகளில் 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது மற்றும் படத்தின் முதல் நாள் வெளிநாட்டு வசூல் சுமார் 4 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
தெலுங்கு மாநிலங்களில் கேப்டன் மில்லர் வெளியாகவில்லை என்றாலும், முதல் நாளில் படத்தின் ஒட்டுமொத்த வசூல் நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தமிழகத்தில் பொங்கல் விடுமுறையுடன் இருப்பதால், அடுத்த வாரத்தில் கேப்டன் மில்லர் மேலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ‘அயலான்’ படத்தை விட ‘கேப்டன் மில்லர்’ கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் அதிகமாக வசூலித்துள்ளது.