Dhanush: பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தனுஷின் படங்கள்! லிஸ்டில் ‘கேப்டன் மில்லர்’ இடம்பெறுமா?
இந்த படம், பொங்கலை முன்னிட்டு இன்று (ஜனவரி 12) வெளியாகியுள்ளதை தொடர்ந்து, இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்து வருகின்றனர். இந்த படம் மட்டுமன்றி, தனுஷின் பிற சில படங்களும் கூட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி வெற்றி பெற்றுள்ளன.
தனுஷும்-பொங்கல் ரிலீஸும்..
பெரிய நடிகர்கள், வழக்கமாக பெரிய பண்டிகைகளை குறிவைத்து அவர்களின் படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், நடிகர்
நடிக்கும் படங்களுக்கும், பொங்கல் பண்டிகைக்கும் நல்ல பந்தம் உள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியாகும் இவரது படங்கள் பல ஹிட் அடித்து, நல்ல விமர்சனங்களையும் பெற்று தந்துள்ளன. அந்த வகையில், இதுவரை பொங்கலன்று வெளியாகி வெற்றி பெற்ற தனுஷ் படங்களின் லிஸ்டை இங்கு பார்க்கலாம் வாங்க.
தேவதையை கண்டேன்:
2005ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை குறிவைத்து வெளியான படம், தேவதையை கண்டேன். தனுஷ், தனது திரை வாழ்க்கையில் மெல்ல மெல்ல முன்னேறி வந்து கொண்டிருந்த வருடம் அது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்திருப்பார். பாபு என்ற டீ விற்கும் பையனாக நடித்து கலக்கியிருப்பார், தனுஷ். இந்த படத்தை பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார். இப்படம், சூப்பர் ஹிட் அடித்து நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
படிக்காதவன்:
பொல்லாதவன், யாரடி நீ மோகினி என இரண்டு பெரிய ஹிட் படங்களை கொடுத்த பிறகு, தனுஷ் நடித்த படம் படிக்காதவன். இப்படம், 2009ஆம் ஆண்டு பொங்கலை குறிவைத்து ரிலீஸ் செய்யப்பட்டது. தனுஷிற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். படிக்காத, வேலைக்கு போகாத இளைஞன், படித்த பெண்ணை ரவுடிகளை துவம்சம் செய்து விட்டு கரம் பிடிக்கும் கதைதான் படிக்காதவன். இந்த படத்தை சுராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்துடன் சேர்ந்து விஜய்யின் வில்லு படமும் வெளியானது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் தனுஷின் படமே வெற்றி பெற்றது.
குட்டி:
மித்ரன் ஆர்.ஜவஹருடன் மூன்றாவது முறை தனுஷ் கைக்கோர்த்த படம், குட்டி. இவர்கள் ஏற்கனவே யாரடி நீ மோகினி மற்றும் உத்தமபுத்திரன் போன்ற படங்களில் பணிபுரிந்திருந்தனர். குட்டி படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஷ்ரேயா நடித்திருந்தார் இந்த படம், கலவையான விமர்சனங்களுடன் தியேட்டரில் 50 நாட்களுக்கும் மேல் ஓடியது. வசூலும் ஓரளவிற்கு சுமாராக இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இப்படம், இப்போது வரை பலருக்கு பிடித்த ஃபீல் குட் படமாக உள்ளது.