தனுஷின் கேப்டன் மில்லர் கதை என்னுடையது.. புகார் அளித்த வேல ராமமூர்த்தி!

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் கேப்டன் மில்லர் படத்தின் கதை தன்னுடையது என நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி கூறியிருந்த நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதா சதீஷ், அதிதி பாலன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிஷகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

தாங்கள் கட்டிய கோயிலுக்குள் செல்ல முடியாமல் மன்னர் ஆட்சியில் மத்தளம் பாறை கிராமத்து மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அதனைப் பொறுக்க முடியாமல் பிரிட்டீஷ் படையில் சேர்ந்தால் மரியாதை கிடைக்கும் என அங்கு செல்கிறார் தனுஷ். ஆனால் அங்கு ஆங்கிலேயர்களை எதிர்க்கும் இந்திய மக்களை சுட்டுக் கொல்லும் வேலை வழங்கப்படுகிறது. இதனால் குற்ற உணர்ச்சியில் ஊர் திரும்பும் தனுஷை கிராமத்து மக்கள் ஊரை விட்டு துரத்திவிட புரட்சி கூட்டத்துடன் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்து சண்டை செய்கிறார். இந்த படத்தில் தனுஷ் மூன்று விதமான கெட்டப்பில் நடித்திருந்தார். இந்த படத்தை பார்த்த அனைவரும் தனுஷின் நடிப்பை பார்த்து மிரண்டு போய் பாராட்டி வருகின்றனர்.

கதை என்னுடையது: இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் கதை அருண் மாதேஸ்வரனுடையது அல்ல தன்னுடையது என நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி புகார் கூறியிருந்தார். நான் எழுதிய பட்டத்து யானை நாவலை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டது தான் கேப்டன் மில்லர் படத்தின் கதை என கேள்விப்பட்டேன். இதை செய்ய அசிங்கமா இல்லையா?. பட்டத்துயானை நாவலை எழுதிய நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். என்னிடம் சொல்லியிருக்கலாம், இல்லை என்றால் அனுமதி கேட்டிருக்கலாம் என்றார். கேப்டன் மில்லர் படம் மட்டும் கிடையாது மேலும் சில படங்களிலும் என் கதைகள், காட்சிகளை திருடி பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *