பொங்கலுக்கு வெளியான தனுஷ் படம்..பொங்கல் சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகுமா? கை கொடுக்குமா கேப்டன் மில்லர்!

சென்னை: 2024-ம் ஆண்டு பிறந்து ஜோராக போய் கொண்டு இருக்கும் நிலையில், பொங்கல் பாண்டிகையையொட்டி பல டாப் நடிகர்களின் படங்கள் இன்று வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு அஜித் நடித்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் வெளியானது. இந்த ஆண்டு, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்மற்றும் பிரியங்கா மோகன் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான், விஜய் சேதுபதி நடித்த பான் இந்திய திரைப்படமான மெரி கிறிஸ்துமஸ், அருண்விஜய் மற்றும் எமி ஜாக்சன் நடித்த மிஷன் அத்தியாயம் படம் வெளியாகி உள்ளன.

அந்த வகையில், நடிகர் தனுஷ் மில்லர் திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. படத்திற்கு இணையத்தில் அவரது ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். வழக்கமாக சில நடிகர்களுக்கு பொங்கல் சென்டிமென்ட் ஒர்க் அவுட்டாகாது, சிலருக்கு கை கொடுக்கும் அந்த வகையில் தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படங்கள் எவை, அவை கை கொடுத்ததா என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் தனுஷ், தற்போது பான் வேர்ல்டு ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் கோலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்த நடிகர் தனுஷ் தற்போது பாலிவுட், டோலிவுட்,ஹாலிவுட் என சினிமாவையை ஒரு கலக்கு கலக்கி வருகிறார். துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகரான தனுஷூக்கு அந்த படம் நல்ல தொடக்கமாக அடைந்தது. அதன் பின்,அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தேவதையை கண்டேன், திருடா திருடி போன்ற படங்களில் நடித்தார்.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன்: தனுஷ் நடிப்பில் 2004ம் ஆண்டு முதன் முதலில் பொங்கல் வெளியான திரைப்படம் புதுக்கோட்டையிலிருந்து சரவணன். எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கிய உருவான இந்த படத்தில் அபர்ணா பிள்ளை, கருணாஸ்,பீட்டர் ஹெயின், ஸ்ரீதேவி அசோக் என பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தில் தனுஷ் பாடிய நாட்டு சரக்கு பாடல் மட்டுமே ஹிட்டடித்தது. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

தேவதையை கண்டேன்: இதையடுத்து 2005ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தேவதையை கண்டேன் படம் வெளியானது. ஸ்ரீதேவி விஜயகுமார், கருணாஸ், மும்தாஜ், நாசர் என பலர் நடித்திருந்தனர். பெண்கள் ஆண்களை காதலித்து ஏமாற்றுவது என வித்யாசமான கதையில் நடித்திருந்தார். பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு தேன் இசைத் தென்றால் தேவா இசையமைத்து இருந்தார். இந்த படம் ஓரளவுக்கு வசூலை அள்ளியது.

படிக்காதவன்: தேவதையை கண்டேன் திரைப்படத்திற்கு பிறகு பலத்திரைப்படம் வெளியானாலும், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, தனுஷின் படம் ஒன்று பொங்கலுக்கு வெளியானது. சுராஜ் இயக்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படிக்காதவன். இந்த படத்தில் தனுஷ், தமன்னா, விவேக், சுமன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மணிசர்மா இசையமைத்த இப்படத்தில் தனுஷின் நடிப்பு ரசிக்கும் படி இருந்தது இந்த படமும் சுமாராக ஓடியது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *