தோனி நம்ம நினைக்கிற மாதிரி இல்ல.. இந்த கெட்ட பழக்கம் எல்லாம் இருக்கு..முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து
இந்திய கிரிக்கெட் அணியில் நிகரற்ற முடி சூடா மன்னனாக விளங்குபவர் நமது தல தோனி தான். தோனி மீது ஒரு தெளிவான பிம்பம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. தோனி வல்லவர், நல்லவர் ஹீரோ என்றுதான் ரசிகர்கள் அவர் குறித்து எப்போதும் பேசுவார்கள்.
இந்த நிலையில் தோனி ஹூக்கா என்ற புகை பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது சில ரசிகர்கள் மனதை வேதனை அடையும் செய்தது. இந்த நிலையில் தோனி குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
புகைப்பிடிப்பது தவறு என்று நாம் கூறி வரும் நிலையில் ஹூக்கா முறையில் பயன்படுத்துவதில் சீனியர் ஜூனியர் என்ற பாகுபாடை தோனி தான் ஒழித்தார் என்று ஜார்ஜ் பெய்லி கூறியிருக்கிறார். தோனியின் தலைமையில் ஜார்ஜ் பெய்லி 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காகவும் 2016 ஆம் ஆண்டு புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காவும் விளையாடிருக்கிறார்.
இது குறித்து பேசிய ஜார்ஜ் பெய்லி, தோனிக்கு சீசா மற்றும் ஹூக்கா முறையில் புகை பிடிப்பது மிகவும் பிடிக்கும். இந்த புகையை பிடிப்பதற்காக அவர் அறையிலே இதற்கான செட் அப்பை உருவாக்கி வைத்திருந்தார். அவருடைய ஹூக்காவை யார் வேண்டுமானாலும் அவருடைய அறைக்கு வந்து பயன்படுத்தலாம். தோனியின் அறைக்கு எப்போது யார் வேண்டுமானாலும் செல்லலாம்.
இதனாலே தோனியின் அறையில் பல இளம்வீரர்கள் இருப்பார்கள். இந்தியா உள்ளிட்ட மற்ற கிரிக்கெட் அணியில் சீனியர்கள் மட்டும்தான் இவ்வாறு புகையைப் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அந்தப் பாகுபாடை உடைத்தவர் தோனி தான். இளம் வீரர்கள் உள்ளிட்ட பலரும் தோனியின் அறைக்கு சென்று போட்டியில் என்னென்ன நடந்தது என்பது குறித்து பேசுவார்கள்.
இதன் மூலம் தோனி அனைவருக்கும் இடையே உள்ள மனச்சுவரை உடைத்து எறிந்தார் என்று ஜார்ஜ் பெய்லி கூறி இருக்கிறார். ஜார்ஜ் பெய்லி தோனியை பெருமையாக பேசுவதாக நினைத்துதான் இந்த கருத்தை கூறி இருக்கிறார். ஆனால் புகை பிடிக்க ஒரு ரூமிலே தனி செட் அப் மற்றும் இளம் இளம் வீரர்களுக்கும் தோனி இந்த வசதியை பயன்படுத்த அனுமதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.