ஆட்டத்தை தொடங்கிய தோனி.. 16 வருடத்திற்கு முன்பு பார்த்த அதே லுக்.. முதல் பயிற்சி எப்படி இருந்தது

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனுக்கான பயிற்சி முகாமை சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ள சிஎஸ்கே அணி தற்போது ஆறாவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்கி இருக்கிறது.

இந்த நிலையில் 42 வயதான தோனி தன்னுடைய கடைசி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருக்கிறார். இதற்காக ரசிகர்களுக்கு அவர் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்க உள்ளார். தோனி தற்போது தான் சிக்ஸர் அடிப்பதற்கும் கேப்டன்ஷிப் செய்வதற்கும் பிரபலமாக இருக்கிறார்.

ஆனால் தோனி முதன்முதலாக பிரபலமானது அவருடைய வித்தியாசமான ஹேர் ஸ்டைலால் தான். அந்த காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் நீளமாக முடி வைத்ததே கிடையாது. ஆனால் தோனி முதன் முதலாக தன்னுடைய வித்தியாசமான ஹேர் ஸ்டைலால் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு தோனியின் பேட்டிங் திறமையாலும் விக்கெட் கீப்பிங் திறமையாலும் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தனர். ஒரே நாளில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தோனி சூப்பர் ஸ்டார் ஆக மாறினார். இந்த நிலையில் தோனி முடி உதிர்தல் பிரச்சனை இருக்கிறது என்று கூறி தன்னுடைய நீளமுடியை வெட்டினார்.

தற்போது தன்னுடைய கடைசி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளதால் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க வேண்டும் என முடிவெடுத்த தோனி தன்னுடைய பழைய ஹேர் ஸ்டைலை மீண்டும் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார். ஐபிஎல் 17வது சீசனுக்கான பயிற்சி முகாமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தொடங்கினார்.

தோனி தன்னுடைய பழைய ஹேர் ஸ்டைலில் களத்திற்கு வந்தவுடன் அங்கிருந்த மைதான ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர். நீளமான முடியுடன் தோனி களத்திற்கு வந்து பார்த்ததில் எவ்வளவு நாளாகி விட்டது என்று பலரும் சந்தோஷப்பட்டனர். அது மட்டும் அல்லாமல் தோனி தன்னுடைய பேட்டிங் அதிரடியையும் பயிற்சி முகாமில் காட்டினார். மேலும் தீபக்சாகர் போன்ற வீரர்கள் பந்துவீச்சில் ஈடுபட்டனர். இது பயிற்சி முகாமின் முதல் நாள் என்பதால் வீரர்கள் அடிப்படை பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *