“தோனி இப்பவே ஆரம்பிச்சிருப்பார்” – ஆஸி போட்டியில் மைக்கேல் ஹசி கில்கிறிஸ்ட் பேச்சு
முதல் இடம் என்றால்வணிகரீதியாக மட்டுமில்லாமல், வீரர்களுக்கான வசதி மற்றும் பாதுகாப்பு, போட்டியின் தரம் என எல்லாவற்றிலும் உச்ச நிலையில் இருக்கிறது.
சில ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட்டின் மதிப்பு என்பது மிகப்பெரிய அளவில் மாறி இருக்கிறது. ஒரு கட்டத்தில் நீளும் ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோர்வை தரக்கூடியதாக இருக்கிறது என்று பேசப்பட்டது.
ஆனால் கோவிட் காலத்திற்குப் பிறகு ஆண்டின் துவக்கத்தில் இருந்தே மார்ச் மாத இறுதியில் துவங்கும் ஐபிஎல் தொடரை ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஐபிஎல் தொடருக்கு மிகவும் மதிப்பைக் கூட்டக்கூடிய வீரர்களில் முதன்மை இடத்தில் மகேந்திர சிங் தோனி இருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடர் அவருக்கு கடைசி தொடராக இருந்தாலும் இருக்கலாம் என்று, இந்தியா முழுவதும் எல்லா அணிகளின் ரசிகர்களும், மகேந்திர சிங் தோனி விளையாடுவதை பார்க்க மைதானத்தில் குவிந்தார்கள் என்பதே இதற்கு உதாரணம்.
மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் அவருக்கு காலில் காயம் இருந்தது. அதை வைத்துக் கொண்டேதான் அவரால் முடிந்ததை மீறி செயல்பட்டார். இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றதும், அடுத்த சில வாரங்களில் காலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். இப்பொழுது பயிற்ச்சியையும் ஆரம்பித்து இருக்கிறார்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் ஆஸ்திரேலியா மோதிக்கொண்ட இரண்டாவது t20 போட்டியில் மைக்கேல் ஹொவர்ட், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மைக்கேல் ஹசி மூவரும் மகேந்திர சிங் தோனி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள்.
இதில் முதலில் மைக்கேல் ஹசி கூறும் பொழுது “ஐபிஎல் தொடரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். இது சிறந்த தொடராக இருக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த வீரர்கள் வருகிறார்கள். மேலும் அதில் சிறந்த இந்திய வீரர்களும் விளையாடுகிறார்கள்.
இதில் ஒரு பகுதியாக இருப்பது நம்ப முடியாத விஷயம். மேலும் மக்கள் கூட்டமும் அவர்களின் சத்தமும் வேறொரு உலகத்தை அங்கு உருவாக்கும். இதற்காக தோனி இப்பொழுதே திரும்ப வந்துவிட்டார். அவர் இந்த நேரத்திலேயே வலைகளில் பந்தை அடித்து பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பார்” என்று கூறி இருக்கிறார்.