இனியும் சேப்பாக்கத்தில் தோனியின் திட்டம் பலிக்காது.. இதுதான் காரணம்.. இப்படி ஆகிப் போச்சே

2024 ஐபிஎல் தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியாகி உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்த சீசனிலும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சிஎஸ்கே பங்கேற்க உள்ள அந்த முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

தோனியின் கேப்டன்சி மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயம் சிஎஸ்கே அணி தான் இந்த முதல் போட்டியிலேயே வெல்லப் போகிறது என சிஎஸ்கே ரசிகர்கள் ஒரு புறம் கூறி வருகிறார்கள். மறுபுறம் பெங்களூர் அணியின் ரசிகர்கள் சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே அணியின் கோட்டை இல்லை என கூறி வருகின்றனர்.

முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரரான அபினவ் முகுந்த்தும் அதே விஷயத்தை கூறி இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமாக அவர் கூறுவது சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் மாறி இருப்பதைத் தான். முன்பு சேப்பாக்கம் என்றாலே நிதானமாக ரன் சேர்க்க முடியும் என்ற நிலை இருந்தது. குறிப்பாக ஸ்பின்னர்களின் கோட்டையாக இருந்தது.

அதற்காகவே சிஎஸ்கே அணியல் ரவீந்திர ஜடேஜாவுடன் பந்து வீச இரண்டு அனுபவ சுழற் பந்துவீச்சாளர்கள் எப்போதும் இடம் பெற்று வருகிறார்கள். ஆனால், கடந்த ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் இரண்டு விதமாக இருந்தது. சில போட்டிகளில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த பிட்ச், சில போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சரிசமமான வாய்ப்பை வழங்கும் பிட்ச்சாக இருந்தது.

2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கோப்பை வேன்ரப் போதும் தங்களின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளிடம் தோல்வி அடைந்து இருந்ததை சுட்டிக் காட்டினார் அபினவ் முகுந்த்.

அந்த வகையில் இனியும் சேப்பாக்கம் சிஎஸ்கே அணியின் கோட்டை என கூற முடியாது எனக் கூறிய அவர், பெங்களூர் அணி ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணியை வீழ்த்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *