தோனி கொடுத்த வாக்குறுதி.. காப்பாற்றிய சிஎஸ்கே நிர்வாகம்.. நெகிழ்ச்சியில் ராபின் மின்ஸ் தந்தை!

ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் என் மகனை வாங்கவில்லை என்றால், சிஎஸ்கே அணி நிச்சயம் வாங்கும் என்று தோனி கூறியதாக இளம் வீரர் ராபின் மின்ஸ்-ன் தந்தை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் அணியாலும், வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கும் வாங்கப்பட்டனர். அதேபோல் இந்திய வீரர்களில் ஹர்சல் படேல் ரூ.11.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.

இந்திய உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை சமீர் ரிஸ்வி ரூ.8.4 கோடிக்கு சிஎஸ்கே அணியாகும், குமார் குசாஸ்கரா ரூ.7.20 கோடிக்கு டெல்லி அணியாலும், சுபம் துபே ரூ.5.8 கோடிக்கும் ராஜஸ்தான் அணியாலும் வாங்கப்பட்டனர். இந்த வீரர்களை வாங்குவதற்கு சில அணிகளிடயே போட்டு ஏற்பட்டது. ஆனால் ஒரேயொரு வீரரை வாங்க சிஎஸ்கே மற்றும் மும்பை இரு அணிகளும் தீவிரமாக போட்டியிட்டன.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 21 வயதாகும் ராபின் மின்ஸை வாங்க சிஎஸ்கே, மும்பை, குஜராத் உள்ளிட்ட 3 சாம்பியன் அணிகளும் போட்டியிட்டது. இறுதியாக குஜராத் அணி ராபின் மின்ஸை ரூ. 3.6 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. முன்னாள் ராணுவ வீரரின் மகனான ராபின் மின்ஸ், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஐபிஎல் தொடரில் முதல் விளையாடும் முதல் பழங்குடியின கிரிக்கெட் வீரராவார்.

ராபின் மின்ஸ் ஏலத்தில் எடுக்கப்பட்ட போது அவரின் தந்தை பிரான்சிஸ் சேவியர் ஜார்க்கண்ட் விமான நிலையத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளாளர். அப்போது விமான நிலையத்தில் பணியாற்றி வந்த ஊழியர் கூறிய பின்னரே, தன் மகன் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது. இதனால் அவரின் குடும்பமே மகிழ்ச்சியடைந்துள்ளது. இவரை ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிறிஸ் கெய்ல் என்று அம்மாநில கிரிக்கெட் வட்டாரத்தில் அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் பிரான்சிஸ் சேவியர் தோனியை சந்தித்தது குறித்து பேசி இருக்கிறார். அதில், சில மாதங்களுக்கு முன் தோனியை ஜார்க்கண்ட் விமான நிலையத்தில் சந்தித்தேன். ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் ராபினை வாங்க முன்வரவில்லை என்றால், நிச்சயம் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கும் என்று தெரிவித்தாக கூறியுள்ளார். தோனி அறிவுறுத்தியதன் பேரில் ராபின் மின்ஸ் பெயர் உச்சரிக்கப்பட்ட போது முதல் ஆளாக சிஎஸ்கே அணி கைகளை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *