2023-ம் ஆண்டில் இத்தனை லட்சம் கார்களை விற்பனை செய்ததா மாருதி சுசூகி நிறுவனம்? விவரம் இங்கே

இந்தியாவின் முன்னனி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, 2023-ம் ஆண்டில் மட்டும் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. தொடர்ச்சியான 12 மாத காலகட்ட்த்தை எடுத்துக்கொண்டால் இதுதான் மாருதி நிறுவனத்தின் அதிகப்பட்ச விற்பனையாகும். இந்த விற்பனை எண்ணிக்கை உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி இரண்டையும் சேர்த்தே கணக்கிடப்படுள்ளது. கடந்த ஆண்டு வெளிநாட்டிற்கு 2.69 லட்ச கார்களை மாருதி சுசூகி நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி, டிசம்பர் மாதத்தில் மட்டும் 1.06 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும் இதே மாதத்தில் 26,884 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 1.28 சதவிகிதம் குறைவாகும். அதே சமயத்தில் ஒட்டுமொத்த விற்பனையை பொறுத்தவரை 2023-ம் ஆண்டு மிகச்சிறப்பாக இருந்துள்ளது.

2023-ம் ஆண்டில் மிட் சைஸ் SUV காரான கிரான்ட் விடாரா (Grand Vitara), சப் காம்பேக்ட் SUV காரான பிரெஸா (Brezza) மற்றும் செடான் வகை டிசைர் (Dzire) போன்றவை அதிகமாக விற்பனையாகியுள்ளன. மேலும் 2023-ம் ஆண்டு அறிமுகபடுத்தப்பட்ட க்ராஸ் ஓவர் SUV காரான ஃப்ரான்ஸ் (Fronx) நன்றாக விற்பனை ஆகியுள்ளது. ஆனால் முன்பு போல் மாருதியின் சிறிய ரக கார்களான ஆல்டோ மற்றும் S-பிரெஸ்ஸோ போன்றவையின் விற்பனை மிகவும் மந்தமாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம், தற்போது இந்திய மக்களிடத்தில் SUV கார்கள் மீதான மோகம் அதிகரித்துள்ளது. அதனால்தான் சிறிய ரக கார்களின் விற்பனை எண்ணிக்கை மிகவும் மோசமாக உள்ளது.

இந்த இரண்டு ஆரம்ப நிலை சிறிய கார்களும் வெறும் 2,557 என்ற எண்ணிக்கையிலேயே விற்பனையாகியுள்ளது. 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 9,765-யாக இருந்தது. பலேனோ, செலரியோ, இக்னிஸ் வேகன்R போன்ற கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 2022-ம் ஆண்டு டிசம்பரில் 57,502 ஆக இருந்தது. 2023 டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 45,741-யாக குறைந்து போனது.

டீசல் இஞ்சின் கார்களின் உற்பத்தியை மாருதி சுசூகி நிறுவனம் நிறுத்தியிருந்தாலும் SUV கார்களின் விற்பனை அந்த இழப்பை ஈடுகட்டியுள்ளது என்றே கூற வேண்டும். 2023-ம் ஆண்டு ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்மி காரை அறிமுகப்படுத்தியது மாருதி. இதன் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றாலும், மாருதியின் பல்வேறு SUV கார்களை அதிகமாக பார்க்க முடிகிறது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் விற்பனையில் மாருதி சுசூகி நிறுவனம் பல மடங்கு முன்னனியில் இருந்தாலும், அதன் சிறிய ரக கார்களின் விற்பனை மிக மோசமான நிலையில் உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *