நியூமராலஜி பார்த்து பெயரை மாற்றினாரா Prabhass? The Raja Saab போஸ்டர் பிரச்சனை – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் மாருதி என்பவர் முதல் முறையாக தனது கனவு நாயகனான தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் பிரபாஸை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் பிரபல நடிகர் யோகி பாபு இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றது.
தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஸ்டாராக கடந்த பல ஆண்டுகளாக திகழ்ந்துவரும் பிரபாஸ் அவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் எந்த திரைப்படமும் கை கொடுக்கவில்லை என்று கூறினால் அது நிச்சயம் மிகையல்ல. குறிப்பாக பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படங்களின் இரண்டு பாகங்களுக்கு பிறகு பெரிய அளவில் ஹிட்டான திரைப்படங்கள் பிரபாஸுக்கு இதுவரை வரவில்லை.
பாகுபலி படத்திற்கு பிறகு வந்த பிரபாஸின் “சாகோ”, “ராதே ஷியாம்” மற்றும் “ஆதிபுருஷ்” உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறவில்லை. இறுதியாக வெளியான பிரஷாந்த் நீலின் சலார் நல்ல வரவேற்பை பெற்றாலும், பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கவில்லை என்றே கூறலாம். இந்த சூழலில் தான் மாருதி இயக்கத்தில் தமன் இசையில் உருவாகவுள்ளது ராஜா சாப் திரைப்படம்.
இன்று காலை படக்குழு தி ராஜா சாப் படத்தின் first look போஸ்டரை வெளியிட்டது, ஆனால் சுமார் 500 கோடி என்ற பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள படத்தின் First Look போஸ்டரில், படக்குழு செய்த தவறு இப்பொது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இன்று வெளியான தி ராஜா சாப் பட போஸ்டரில் Prabhass நடிக்கும் புதிய படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
https://twitter.com/Chrissuccess/status/1746769972968214714
பொதுவாக Prabhas தனது பெயரில் ஒரு S தான் சேர்த்திருப்பர், இந்த போஸ்டரில் PRABHASS என்ற பெயரை பார்த்ததும், அவருடைய ரசிகர்கள் நியூமராலஜி பார்த்து பிரபாஸ் தனது பெயரை மாற்றிவிட்டார் என்று கூறினார். ஆனால் படக்குழு இப்பொது அளித்துள்ள தகவலில் அது Prabhas’s The Raja Saab என்று வரவேண்டியது தவறாக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இதனால் இன்று இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது இந்த படம்.