விஜயகாந்தின் தவசி படத்திற்கு வசனம் எழுதியது சீமானா? உண்மை என்ன?

கேப்டன் விஜயகாந்த் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தவசி படம் குறித்து பேசியது பொய் என்று கூறி வரும் நிலையில், இதற்கு தவசி பட தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருந்த கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலரும் விஜயகாந்த் குறித்து தங்களது நினைவலைகளை பகிர்ந்து வருகினறனர். அதேபோல் விஜயகாந்துடன் பயணித்த பலரும் அவரை பற்றி பேசி வருகின்றனர்.

அந்த வகையில் விஜயகாந்த் குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான கூறுகையில், அவர் நடித்த தவசி படத்தில் நான் பணியாற்றி இருக்கிறேன். அந்த படத்திற்கு வசனம் எழுதியது நான் தான் என்று கூறியிருந்தார். சீமானின் இந்த பேச்சு இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், படத்தை பார்த்தபோது அதில் திரைக்கதை வசனம் உதயசங்கர் என்று இருந்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் சீமான் பொய் சொல்கிறார் என்று கூறிய நிலையில், இது குறித்து ஆய்வு செய்த யூடர்ன் என்ற பத்திரிக்கை, இயக்குனர் உதயசங்கரை (தவசி பட இயக்குனர்) தொடர்புகொண்டு சீமான் பேசியது குறித்து கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்த இயக்குனர் உதயசங்கர், சீமான் சொல்வது சரிதான். தவசி படத்திற்கு அவர்தான் வசனம் எழுதினார். அவர் எழுதிய வசனத்தை படப்பிடிப்பு தளத்தில் சிறு திருத்தங்க்ள மட்டுமே நான் செய்தேன்.

இந்த நேரத்தில் அவர் இயக்கிய படங்கள் தோல்வியடைந்தது. இதனால் தவசி படத்தில் அவரது பெயர் வசனம் எழுதியது என்று இருந்தால், தன்னை ஒரு வசனகர்த்தவாக மட்டுமே பயன்படுத்துவார்கள். இயக்குனர் வாய்ப்பு கிடைக்காது என்பதால் சீமான் என் பெயரை திரைக்கதை வசனம் என்று வைத்துக்கொள்ள சொன்னார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அவர் வற்புறுத்தியதால் என் பெயரை போட்டுக்கொண்டேன். அதற்காக அவருக்கு சிறப்பு நன்றி என்று அவரை பெயரை போட்டிருந்தோம் என்று கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *