2023க்கு முன்னாடி நீங்க கார் , பைக் வாங்கினீங்களா? உடனே நம்பர் பிளேட் மாத்துங்க.. ரொம்ப முக்கியம்

2023 நவம்பருக்கு முன் நீங்கள் பைக், கார் வாங்கி இருந்தால்.. உங்கள் வாகனத்தில் இருக்கும் நம்பர் பிளேட்டுகளை உடனே மாற்றிவிடுங்கள்.

2023 நவம்பர் விதிகளின்படி நீங்கள் பின்வரும் விதிகளை உங்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளில் பின்பற்ற வேண்டும்.

1. 2023 நவம்பருக்கு முன் வாங்கி இருந்தால்.. உங்கள் பிளேட்டில் standard font பயன்படுத்தி, முறையான இடைவெளி விட்டு நம்பர்களை வைக்க வேண்டும்.

2. எல்லா எண்கள், குறிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஒரே அளவில் இருக்க வேண்டும்.

3. நம்பர்களில் டிசைன் இருக்க கூடாது.

4. நம்பர் பிளேட்டில் எந்த சிம்பிலும், பெயர்களும் இருக்க கூடாது.

5. வெள்ளை போர்டில் கருப்பு நிறத்தில் எண்கள் இருக்க வேண்டும்.

6. Press , Doctor போன்ற பணி தொடர்பான விஷயங்களை போட கூடாது.

7. வாகனங்களில் நம்பர் பிளேட்கள் வைக்க சாதாரண ஸ்க்ரூ, போல்டுகளுக்கு பதிலாக ரிவெர்ட் பொறுத்தப்படுவது கட்டாயம் ஆகிறது. இந்த பிளேட்களை நீக்க முடியாத அளவிற்கு ரிவெர்ட் பொறுத்த வேண்டும். கடந்த நவம்பரிலேயே இந்த விதி வந்துவிட்டது. ஆனாலும் இப்போதுதான் இதை நாடு முழுக்க அமல்படுத்த தொடங்கி உள்ளனர். அதேபோல் உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) கொண்டு வருவதும் அவசியம் ஆகிறது.

வேறு முக்கிய விஷயம்: இந்தியாவில், ஏப்ரல் 1, 2019க்கு முன் விற்கப்பட்ட வாகனங்களில் உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) பிளேட்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. எச்எஸ்ஆர்பி இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பதே தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க விதி. ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரையில் இதற்கு அபராதம் விதிக்கப்படும்.

ஒரு HSRP ஆனது எரிபொருள் வகையைக் குறிக்கும் வண்ண-குறியிடப்பட்ட லேபிளுடன் உள்ளது. நம்பர் பிளேட்டுக்கு விண்ணப்பிப்பது என்பது ஆன்லைனில் முடிக்கக்கூடிய எளிதான செயலாகும்.

இந்த நம்பர் பிளேட்டுகளில் 3டி ஹாலோகிராம், ரிப்ளக்டிவ் ஃபிலிம், ஹலோ கிராம் ‘இந்தியா’ என்ற பெயர் மற்றும் லேசர் மூலம் பொறிக்கப்பட்ட வரிசை எண் போன்ற சிறப்பு அம்சங்கள் இதில் இருக்கும்.

அதேபோல் ஜூலை 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு விற்கப்படும் வாகனங்கள் இப்போது தானாக HSRP வகை எண் பிளேட்டுகளுடன் வருகின்றன. கர்நாடகா போன்ற பல மாநிலங்கள் இப்போது பிப்ரவரி 17, 2024 க்கு முன் பழைய வாகனங்களின் நம்பர் பிளேட்களை HSRP வகையில் மாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளன. வாகனத்தின் வகையைப் பொறுத்து 500 முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

என்ன விதமான தட்டு; எலக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யப்பட்டு உங்கள் காருடன் இணைக்கப்பட்ட அலுமினிய உரிமத் தகடுதான் உயர் பாதுகாப்பு பதிவுத் தட்டு (HSRP) என்று அழைக்கப்படுகிறது. நீல நிற ஹாலோகிராமில் குரோமியம் அடிப்படையிலான அசோக சக்ரா சின்னம் HSRP உடன் சேர்க்கப்பட்டுள்ளது. HSRP தகடு 10 இலக்க PIN அல்லது நிரந்தர அடையாள எண், லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கீழ்-இடது மூலையில் பொறிக்கப்பட்டுள்ளது. 20 மிமீ நீளம் மற்றும் 20 மிமீ அகலம் ஆகியவை தட்டின் பரிமாணங்கள் ஆகும்.

எப்படி விண்ணப்பம் செய்வது: உயர் பாதுகாப்பு எண் தகடு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் உயர் பாதுகாப்பு பதிவுத் தட்டுக்கு விண்ணப்பிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:

படி 1: https://bookmyhsrp.com/# ஐ பக்கத்திற்கு செல்லவும்..

படி 2: ‘கலர் ஸ்டிக்கர் கொண்ட உயர் பாதுகாப்பு பதிவுத் தட்டு’ என்பதைத் HSRPல் தேர்ந்தெடுக்கவும்.

படி 3: அடுத்து, என்ஜின் எண், சேஸ் எண், பதிவு எண், வாகனப் பதிவு நிலை மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிடவும்.

படி 4: ‘இங்கே கிளிக் செய்யவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 5: அடுத்து, உங்களுக்கு அருகில் உள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்து, அப்பாயிண்ட்மெண்ட் ஸ்லாட்டை முன்பதிவு செய்யவும்.

படி 6: அடுத்த பக்கத்தில், கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

படி 7: சரிபார்ப்பிற்காக ரசீது நகல் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.

தற்போது,​​உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ஒரிசா, ஹிமாச்சலப் பிரதேசம், டெல்லி, டாமன் மற்றும் டையூ மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் எச்எஸ்ஆர்பி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிற மாநிலங்களில் வசிக்கும் நபர்கள், அருகிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) சென்று HSRP க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்த நம்பர் பிளேட்டுகளை பெற வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) சென்று HSRP க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *