கறிவேப்பிலை இதயத்தை காக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கறிவேப்பிலை இதய ஆரோக்கியத்திற்கும், தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் வயிற்றுப்போக்கைத் தடுப்பது மட்டுமல்லாமல், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல சிறந்த செரிமான விளைவுகளையும் கொண்டுள்ளது.
நம் உணவு கலாசாரத்தின் தவிர்க்க முடியாத பொருளாக, பெரும்பாலான உணவுகளில் சுவை மற்றும் வாசனைக்காக சேர்க்கப்பட்டு வருகிறது கறிவேப்பிலை. ஆனால், கறிவேப்பிலை நறுமண மூலிகை மட்டுமல்ல, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும் கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்ஸ், ஃபைபர், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் என பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அமினோ ஆசிட்கள் இதில் அடங்கி உள்ளன.
எனவே, கறிவேப்பிலை இதய ஆரோக்கியத்திற்கும், தொற்றுகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் வயிற்றுப்போக்கைத் தடுப்பது மட்டுமல்லாமல், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல சிறந்த செரிமான விளைவுகளையும் கொண்டுள்ளது. கறிவேப்பிலை நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கும், உடலின் பொதுவான வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
கறிவேப்பிலையின் நன்மைகள்:
நீரிழிவுக்கு உதவும் கறிவேப்பிலை: நமது உடலின் இன்சுலின் செயல்பாட்டில் வேலை செய்வதன் மூலமும், இரத்த சர்க்கரை அளவை குறைத்து கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலமும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கறிவேப்பிலை மேம்படுத்துகிறது. கறிவேப்பிலையில் காணப்படும் ஃபைபர் சத்து செரிமானத்தை மெதுவாக்குவதால் வளர்சிதை மாற்றம் சீக்கிரமாக ஏற்படாது.
வயிற்றுக் கோளறுகளை போக்கும்: செரிமான அமைப்பு சிறப்பாக செயல்பட உதவும் கறிவேப்பிலை வயிறு சார்ந்த பிரச்னைகளை குணப்படுத்தவும் பயன்படுகிறது. குறிப்பாக, கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறந்த செரிமான ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிடுவது செரிமான நொதிகளைத் தூண்டி குடல் இயக்கம் சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. இதில் உள்ள கார்பசோல் ஆல்கலாய்ட்ஸ் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளன.