இதை கவனிச்சீங்களா..! மகளிர் உரிமை தொகையில் வந்த அதிரடி மாற்றம்..!
சட்டசபை தேர்தலில் அறிவித்த மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் வழங்கபட்டு வருகிறது. கலைஞர் உரிமை தொகை என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான உரிமை தொகை கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைவருக்கும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. தற்போது இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் அதிரடி மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் போது தமிழக அரசு சார்பில் SMS அனுப்பப்படும். அதில் இதுவரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைவருக்கும் முதல் முறையாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் வீடியோவுடன் SMS வந்துள்ளது.
அந்த வீடியோவில் “நான் உங்கள் உதயநிதி ஸ்டாலின். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி மாதத்திற்கான தொகை ரூ.1000 உங்களது கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இத்தனை நாள் மு.க.ஸ்டாலின் பெயரில் வந்த SMS இன்று விளையாட்டு துறை அமைச்சர் பெயரில் வந்தது பலரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் தற்போது விளையாட்டுத்துறை அமைச்சர், சிறப்பு திட்ட அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த துறைக்கு அமைச்சராக உள்ளதால் உதயநிதி ஸ்டாலின் பெயரில் SMS வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.