UPI மூலம் பணம் அனுப்பும் போது தவறான நபருக்கு பணத்தை அனுப்பிட்டீங்களா?

UPI மூலம், சில நொடிகளில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும் என்பதால் தற்போது அதிகமான UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர். சின்ன சின்ன பொருட்களை கூட ஆன்லைன் பேமெண்ட் முறையில் பணத்தை செலுத்தி வாங்கிக் கொள்கின்றனர். கூகுள் பே, போன் பே, பேடிஎம் என பல UPI செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இருப்பினும், சில நேரங்களில் UPI மூலம் பணம் அனுப்பும் போது தவறுதலாக தவறான நபருக்கு பணத்தை அனுப்பிவிடலாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் கவலைப்படுகின்ற்னார்.

தவறுதலாக வேறொரு எண்ணிற்கு பணம் அனுப்புவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI) சமீபத்தில் பிரபல சமூக ஊடகமான X தளத்தில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளது. யூபிஐ வழியாக பணம் அணுப்பும் போது நாம் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். ஒருவேளை தவறுதலாக பணம் அனுப்பும் பட்சத்தில் அதனை திரும்ப பெற எங்ககளால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே எப்போதும் பணம் அனுப்புவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு தடவை சரி பார்த்துவிட்டு அனுப்புங்கள். இது சம்மந்தமாக உதவி தேவைப்பட்டால் உங்களுடைய வங்கியை தொடர்பு கொள்ளுங்கள் என அந்தப் பதிவில் NPCI விளக்கமளித்துள்ளது.

அவசரமாக நாம் பணத்தை ஒருவருக்கு செலுத்த நினைக்கும் போது தவறுதலாக வேறொரு நபருக்கு அனுப்பி விடும் சம்பவங்களும் நடந்து வருகிறது.அப்படி அவசரத்தில் பணம் அனுப்பிவிட்டீர்கள் என்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

ஒருவேளை தவறுதலாக பணம் பெற்ற நபர் பணத்தை திரும்ப தர மாட்டேன் எனக் கூறினால், உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் இதற்கு உதவி செய்ய வாய்ப்புள்ளது. தற்போது இதுபோன்று பல சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதால் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *