Dinesh Rachitha : இதோட நிப்பாட்டிக்கோங்க.. எல்லோரும் உங்கள் வேலையை பாருங்க.. ரக்சிதா இன்ஸ்டா பதிவு வைரல்!

நடிகை ரக்சிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 7வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. தற்போது எட்டு போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் இந்த வேளையில் யார் டைட்டில் வின்னராக வருவார் என கணிக்க முடியாத சூழ்நிலை நிலவிவருகிறது . முன்பு இருந்த சீசனில் மக்களால் கணிக்க முடிந்தது. ஆனால் இந்த சீசனில் அது குழப்பமான கணிக்க முடியாத சூழ்நிலை நிலவிவருகிறது .

பெரும்பாலான ரசிகர்கள் மாயா மற்றும் பூர்ணிமா வெளியேற்றப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் தற்போது வரை இவர்கள் இருவரும் வீட்டிற்குள் போட்டியாளர்களாக இருந்து வருகிறார்கள்.

இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மணியும் விஜய் வர்மாவும் வெளியேறிவிடுவர் எனக்கூறப்படுகிறது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட அதன் கிளைமாக்ஸை நெருங்கி விட்டது. நேற்று முன் தினம் குறைவான வாக்குகளை பெற்றதின் அடிப்படையில் ரவீனாவும், நிக்சனும் வெளியேற்றப்பட்டார்கள். இதனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் விசித்ரா தினேஷ் குறித்து பேசியது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. விசித்ரா பாத்திரம் கழுவும் பணியில் ஈடுபட்டபோது தினேஷை மறைமுகமாக சாடி புலம்புகிறார். அதில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிக்கும் வகையில், ‘ இவங்களோட குடுத்தனம் நடத்துறதுக்கு, தனியாவே குடுத்தனம் பண்ணிடலாம். திரும்ப வந்திடாதம்மா தாயே’ என ரச்சிதாவிடம் பேசுவதுபோல் பேசுகிறார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் இதற்கு கண்டனம் தெரிவித்தார்.அவர் ’நீங்கள் பேசியது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம், இன்னொருத்தரோட திருமண வாழ்க்கையில் நாம் கவுன்சிலிங் செய்ய முடியாது’ என்று அமைதியாக அதே நேரத்தில் அழுத்தமாக விசித்ராவை அவர் கண்டித்த விதம் பார்வையாளர்களை கவர்ந்தது.

தினேஷ் மீண்டும் தான் ரச்சிதாவுடன் இணைத்து வாழ பல தருணங்களில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால், ரச்சிதா தரப்பில் இதற்கு எந்த வித சுமுகமான பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ரக்சிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், “ஆம் உண்மை எப்போதுமே கசக்கும், அதற்காக அது உண்மை இல்லை என்று ஆகிவிடாது. இது என்னுடைய போராட்டம், நானே தனியாக போராடிக்கொள்கிறேன். எல்லோரும் உங்கள் வேலையை பார்த்தால் போதும். நாங்களும் எங்களுடைய வேலைகளை பார்க்கிறோம்.எல்லோரும் கருத்து தான் சொல்ல முடியும் ஆனால் என் வாழ்க்கையை யாரும் சரியாக வாழ முடியாது.இது என் போர் எனவே என்னை தனியாக போராட விடுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *