லியோ படத்தில் வன்முறை காட்சிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில் அளிக்க உத்தரவு
மதுரை:மதுரையை சேர்ந்த ராஜமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நடிகர் விஜய்யின் லியோ படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம்.இதனால், சிறு குழந்தைகள் தவறான பாதையில் செல்ல வாய்ப்புள்ளது.
எனவே படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.லியோ படத்தை எதிர்காலத்தில் திரையிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
விளம்பரம் கோரிய மனு:-
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பில், “விளம்பரம் செய்யும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது.விரிவாக்குஅதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் உள்ளன, அந்த காட்சிகள் எங்கு நடைபெறுகிறது என்பதை மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.