அனிமல் இயக்குனரைப் பாராட்டித் தள்ளிய இயக்குனர் அனுராக் காஷ்யப்!
இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.
இந்த படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ஆணாதிக்கத்தை தன் படங்களில் பெருமையான விஷயமாக காட்டுகிறார் எனக் கூறி அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் சந்தீப் ரெட்டி வாங்காவை சந்தித்து அது சம்மந்தமான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் “சந்தீப்புடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. படம் பற்றிய எனது கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். என்னைப் பொறுத்தவரை அவர் நேர்மையான மனிதர். நான் அவரது படத்தை இரண்டு முறை பார்த்தேன். நல்லதோ கெட்டதோ பாலிவுட்டை மாற்றியமைத்த படமாக அனிமல் உள்ளது. அந்த படம் ஏற்படுத்திய தாக்கத்தை யாராலும் புறம் தள்ளிவிட முடியாது” எனக் கூறியுள்ளார்.