நீர் மூலக்கூறுகள் உள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு… மனிதர்கள் வாழத் தகுதியானதா?
பிரபஞ்சத்தில் பூமி மட்டுமே உயிர்கள் வாழ்வதற்கான ஒரே கிரகமாக நம்பப்படுகிறது. இருப்பினும் உயிர்கள் இருந்ததற்கான மற்றும் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் கொண்ட கிரகங்கள் சூரிய மண்டலத்த்தில் உள்ளனவா என்கிற ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ தெரிவித்துள்ளது
கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் Hubble Space தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இந்நிலையில், பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் ஜிஜே9827டி என்ற இந்த கிரகத்தில் நீர் முலக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாறைகள் நிறைந்த கிரகத்தின் வளிமண்டலங்களில் நீர் மூலக்கூறுகள் நிறைந்து இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான முக்கிய சான்றாக உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நீர் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்து இருப்பதால் உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கிரகம் வெள்ளி கிரகத்தை போல 425 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருப்பதால் வளிமண்டலம் நீராவியாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதற்கு முன்பு கண்டறியப்பட்ட நீர் மூலக்கூறு இருக்கும் கிரகங்களை ஒப்பிடும்போது இது பூமிக்கு மிகவும் அருகில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.