நோய்களே வாழ்க்கையாகி விட்டதா… இந்த வாஸ்து தவறுகள் காரணமாக இருக்கலாம்!

வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்து இருந்தால், குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்திருக்கும். எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் இருந்தால், அந்த வீட்டில் எப்போதும், சண்டை சச்சரவு, உடல் உபாதைகள், கடன் பிரச்சனை, போன்ற பல சிக்கல்கள் வாழ்க்கையில் நெருக்கடிகளை ஏற்படுத்தும். எனவே வாஸ்து சாஸ்திரத்தில், நேர்மறை ஆற்றலின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, வீட்டில் குப்பைகள் நிறைந்து இருந்தாலும், சாமான்கள் அங்கே இங்கே என்று சிதறி கிடந்தாலும், நமது மனதில் எரிச்சல் உணர்வும் கோப உணர்வும் தோன்றும். மனதும் ஏதோ இறுக்கமாக இருக்கும். இந்நிலையில் உங்களை நோய்வாய்ப்பட வைக்கும் சில வாஸ்து தவறுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

வடக்கு திசையில் தலை வைத்து படுத்தல்

வடக்கு திசையில் தலை வைத்து படுப்பது, உடல் நலன் பாதிப்பை பெரிதும் ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரப்படி, வடக்கில் தலை வைத்தும், தென் திசையில் கால்நீட்டியம் படுப்பதால், தலை மற்றும் கால் வலியை ஏற்படுத்தும். இது தவிர உடலில் எப்போதும் வலி இருந்து கொண்டே இருக்கும். இதைத்தான் நமது முன்னோர்கள், வடக்கில் தலை வைத்து படுத்தால் வியாதி வரும் என்று கூறுவார்கள்.

ஜன்னல் கதவுகளை எப்போதும் மூடி வைத்தல்

ஜன்னல் கதவுகளை திறந்து வைப்பது வீட்டில் காற்றோட்டம் நிறைந்திருக்க உதவும். பிரெஷ் ஆன காற்று வீட்டிற்குள்ளே வந்தாலே, மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். வீட்டின் ஜன்னல் கதவுகளை திறக்காமல் மூடி இருக்கும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் குடி கொண்டிருக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கப்படும். திறந்து வைப்பதால் வீட்டிற்குள் நல்ல வெளிச்சமும் இருக்கும். இது மனதிற்கு ஆற்றலை கொடுக்கும்.

வீட்டிற்குள் எப்போதும் இருள் சூழ்ந்த நிலை

என்னதான், மின்சார விளக்குகளையும் எல்இடி விளக்குகளையும் எரியவிட்டாலும், அது இயற்கையான சூரிய ஒளி கொடுக்கும் வெளிச்சத்திற்கு ஈடாகாது. சூரியனின் கதிர்கள் தடையில்லாமல் வீட்டிற்குள் வந்தாலே, வீட்டிற்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் காணாமல் போகும். இயற்கை ஒலி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். அதோடு நல்ல சூரிய வெளிச்சம், சிறந்த கிருமி நாசினி என்றால் மிகையில்லை. வீட்டிற்குள் சிறு சிறு பூச்சிகள் எதுவும் நுழையாமல் இருக்கும். எனவே நோய்வாய் படும் வாய்ப்பு மிக மிக குறைவு. வீட்டிற்குள் எப்போதும் இருள் சூழ்ந்த நிலை, அனைவரையும் நோய்வாய்படுத்தும்.

வீட்டில் மரம் செடி இல்லாத நிலை

வீட்டில் செடிகள் அல்லது மரங்கள் இருக்க வேண்டும். முக்கியமாக துளசி செடி, ஆக்சிஜனை அள்ளித் தரும் சில செடிகள், ஆகியவை வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வந்து சேர்க்கும். பசுமையான தாவரங்களை பார்த்தாலே மனதிற்கு புத்துணர்ச்சி பிறக்கும். துளசி போன்ற ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற செடிகளில் இருந்து கிடைக்கும் நேர்மறை ஆற்றல், மனதிற்கு மிகவும் நிம்மதியை அளிக்கும். ஆக்சிஜனை அள்ளி வழங்கும் செடிகள் இருந்தால், அதுவே சிறந்த காற்று சுத்திகரிப்பு கருவி போல் செயல்படும். எனவே கண்களுக்கும் இதயத்திற்கும், இதமான உணர்வை கொடுக்கும், செடிகளை வீட்டில் அவசியம் வளர்க்கவும். உங்கள் வீட்டில் உள்ள இடத்திற்கு ஏற்ப, சிறிய செடிகளை வளர்த்தாலே போதுமானது. இன்றைய அடுக்குமாடி கலாச்சாரத்தில், வீடும் சிறியதாக இருக்கும் பட்சத்தில், முடிந்த அளவு செடியை வளர்க்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *