தவிக்கும் தயாரிப்பாளர்கள். கெத்து காட்டும் ஸ்ரீதேவி மகள்

சினிமா: இந்திய திரையுலகின் எவர் கீர்ன் கனவுக்கன்னி ஸ்ரீதேவியின் மகள் எனும் காஸ்ட்லி விசிட்டிங் கார்டோடு அறிமுகமான ஜான்வி கபூருக்கு ஆல் ஏரியாக்களிலும் ரசிகர்கள்.

தமிழில் ஹிட்டடித்த ‘கோலமாவு கோகிலா’ இந்தி ரீமேக்கில் ஜான்வி தான் ஹீரோயின். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் ஹிட்டடிக்கிற கதைகளின் இந்தி ரீமேக் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் ஜான்வி கபூர்.

ஆனாலும் கால்ஷீட் கேட்டு மும்பைக்கு படையெடுக்கிற தயாரிப்பாளர்களிடம் தொடர்ந்து நோ சொல்லி வருகிறார். ‘பையா’ படத்தோட 2வது பாகத்துக்கு கேட்டாங்க… சிவகார்த்திகேயன் ஜோடியாக கூப்பிட்டாங்க என்று தமிழ் பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதி வந்தாலும், இப்போதைக்கு தமிழ் படங்களில் தலைக்காட்டும் எண்ணம் ஜான்விக்கு கிடையவே கிடையாதாம். தவிர்க்கவே முடியாமல் தந்தை மூலமாக வரும் பட அழைப்புகளுக்கு, தயாரிப்பாளர் பெயர், ஹீரோ பெயர் கேட்டு விட்டு, ‘நோ’ சொல்கிறார்களாம்.

வித்யா பாலனையே தமிழில் இருந்து ‘நடிக்க வரவில்லை’ என்று துரத்தியடித்து, இந்தியில் நடித்த பின்பு, கோடிகளைக் கொட்டி தமிழுக்கு கூப்பிடும் கோலிவுட், தொடர்ந்து சளைக்காமல் ‘மயிலு’ மகளுக்கும் வலைவீசி காத்திருக்கிறது. ஆனால், தான் மலையாளத்தில் ‘பிரேமம்’ இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும், வேறு தென்னிந்திய இயக்குநர்களின் படங்களில் இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று பேட்டி ஒன்றில் மனம் திறந்திருக்கிறார் ஜான்வி கபூர்.

இந்த நிமிஷம் வரைக்கும் எந்தவொரு தமிழ் இயக்குநர்களிடமும் ஜான்வி கபூர் கதையைக் கேட்டதேயில்லை. அப்புறம் எப்படி பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்கிறார்கள் என்று மிரள வைக்கிறார்கள் ஜான்விக்கு நெருக்கமான மும்பை வாலாக்கள். சம்பளம் எல்லாம் கூட அடுத்த கட்டம் தான். படத்தோட பட்ஜெட், தயாரிப்பு நிறுவனம், ஹீரோ, கதை, கதாபாத்திரம், இதைத்தாண்டி தான் தன்னோட சம்பளம் என்று லிஸ்ட் வைத்து படங்களைத் தேர்ந்தெடுத்து கெத்து காட்டி வருகிறார் ஜான்வி.

ஆனாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், ஜான்வி கால்ஷீட் கிடைச்சுட்டா இங்கே இருக்கிற ஹீரோக்களின் கால்ஷீட் பிரச்சினையில்லாம கிடைச்சுடும்… பிசினஸும் எகிறும் என்று ஒவ்வொரு கதையிலும் ஜான்வியை நடிக்க வைக்க ஏக்கப் பெருமூச்சுடன் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்களாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *