திருமணத்தை விட விவாகரத்து தான் இப்போ காஸ்ட்லி..!

லகில் ஒருபக்கம் ஏகப்பட்ட செலவு செய்து தடல்புடலாக கல்யாணம் செய்து கொண்டிருக்கும் அதேவேளையில் கோர்ட் படியேறி பல ஆண்டு பந்தமான திருமணத்தை நிமிடத்துக்குள் உடைத்தெறிந்து விவாகரத்து வாங்கி அதன்படி பல கோடி ரூபாய் ஜீவனாம்சமும் தந்து கொண்டிருக்கிறார்கள்.
வேடிக்கையான உலகம்தான் இது! அகில உலகமும் பொறாமைப்படக் கூடிய அளவுக்கு இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவும் பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் திருமணம் செய்து கொண்டனர். சானியா மிர்ஸாவை விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து சானா ஜாவேத் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சோயிப் மாலிக் அறிவிப்பும் வெளியிட்டுள்ளார். இது அவருக்கு மூன்றாவது திருமணம்.
இதனிடையே இந்த விவாகரத்து மூலம் சோயிப் மாலிக்கிடமிருந்து சானியா மிர்ஸாவுக்கு கிடைக்கும் ஜீவனாம்சம் தொகை எவ்வளவு இருக்கும் என்ற விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் நாட்டின் மிகப் பெரும் பணக்கார கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக். அவருக்கு ரூ.232 கோடி அளவுக்கு சொத்து உள்ளது. இதில் சானியாவுக்கு எவ்வளவு ஜீவனாம்சம் தரப்போகிறார் என்ற தகவல் விரைவில் வெளியாகப் போவது உறுதி. இதேபோன்று விவாகரத்து ஆன பிரபல பெண்களுக்கு எவ்வளவு ஜீவனாம்சம் கிடைத்தது என்ற விவரத்தை இனி பார்க்கலாம். பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ்: 2021 ஆம் ஆண்டில் மெலிண்டா கேட்ஸிடமிருந்து மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸின் விவாகரத்து மிகவும் காஸ்ட்லியான விவாகரத்து ஆகும். பில் கேட்ஸிடமிருந்து மெலிண்டா $76 பில்லியன் அதாவது ரூ.60,66,04,45,00,000 பெற்றார். ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி ஸ்காட்: அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி ஸ்காட் ஆகியோர் 2019 இல் தங்கள் திருமண பந்தத்தை முடித்துக்கொண்டனர்.
அதே ஆண்டில் விவாகரத்து செய்தனர். விவாகரத்து செட்டில்மெண்ட்டின் ஒரு பகுதியாக, மெக்கென்சி அமேசான் நிறுவனத்தில் $36 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 4 சதவீதப் பங்குகளைப் பெற்றார். அலெக் வில்டன்ஸ்டீன் மற்றும் ஜோஸ்லின் வில்டன்ஸ்டீன்: பில்லியனர் தொழிலதிபர், கலை வியாபாரி, பந்தயக் குதிரை உரிமையாளர் மற்றும் வளர்ப்பாளர் அலெக் வைல்டன்ஸ்டைனும் அவரது மனைவி ஜோசலினும் 1999இல் விவாகரத்து செய்து கொண்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *