சிறுபான்மையினர் வாக்கு வங்கிக்கு திமுக, அதிமுக போட்டி போடுகின்றன: இந்து முன்னணி விமர்சனம்
சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக திமுகவும் அதிமுகவும் மாறிமாறி போட்டி போடுவதாக இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மதச்சார்பற்ற அரசியல் செய்வதாகக் கூறிக் கொள்ளும் முதல்வர்ஸ்டாலின், இந்துக்களின் சுடுகாடுகள் பராமரிப்பின்றி கிடக்கின்றன என்பது பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. பல சுடுகாடுகளில் அடிப்படை வசதிகளே இல்லை. சென்னைமற்றும் பிற முக்கிய மாவட்டங்களில்இந்துக்களின் சடலங்களை எரிப்பதோடு சரி. புதைப்பதற்கு அரசாங்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை.
இந்துக்களின் உரிமைகள் மறுப்பு: இந்துக்கள் உயிரோடு இருந்தாலும் உரிமைகள் மறுக்கப்படு கிறது. இறந்த பின்பும்கூட அவர்களது உரிமைகள் பறிக்கப்படுகிறது. இந்துக்களின் கோயில்களைபோல, அவர்களின் சுடுகாடுகளும் அரசின் பிடியில் சிக்கி சீரழிகிறது. கட்டணக் கொள்ளை நடக்கிறது. சென்னை, கோவை, திருப்பூர், சேலம் உட்பட அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் உள்ள இந்து சுடுகாடுகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் பல விவசாய நிலங்கள் கல்லறை தோட்டங்களாக மாறிஇருக்கின்றன. திமுக, அதிமுகபோன்ற கட்சிகள் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதில் மாறி மாறி போடும் போட்டிதான் இதற்கு காரணம்.
கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், கல்லறை தோட்டங்கள், கபர்ஸ்தானங்கள் என சிறுபான்மையினருக்காக பணத்தை செலவிடும் திராவிட மாடல் அரசு, பெரும்பான்மை இந்து சமுதாயத்தை பற்றியும் கொஞ்சம் கவலைப்பட வேண் டும். இந்துக்களை திமுக அரசு புறக்கணிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.