DMK FILES : திமுகவின் ஊழல் தொடர்பாக இன்னும் 14 டேப் இருக்கு… ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்கும் அண்ணாமலை
துக்ளக் பத்திரிக்கையின் 54வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட அமைக்கப்பட்ட இந்தி கூட்டணியில் எல்லாருடைய மகன்களும் இருக்கிறார்கள். ராஜீவ் காந்தியின் மகன், ஷேக் அப்துல்லாவின் மகன், கருணாநிதியின் மகன் என வாரிசு அரசியல் தான் இந்தியா கூட்டணியில் போட்டி போடுகிறது. இன்னொரு பக்கம் ஒரு அரசியல் மற்றும் ஜனநாயகம் எப்படி இருக்க வேண்டும் எனும் பாஜக இருக்கிறது. 1980 மற்றும் 2004 இல் திமுக ஒருவரை எதிர்பார்த்து ஆட்சி பிடிக்க காத்திருந்தது. திமுகவுக்கு இது புதிதல்ல, யாரையாவது தொங்கிப் பிடித்து ஆட்சி அமைத்து விடுவார்கள், அவர்களுக்கு பழகிவிட்டது.
மோடி அரசின் சாதனை
எப்படியாவது தொங்கி பிடித்து இந்தி கூட்டணியில் திமுக இருக்க வேண்டும் என இருக்கிறது. 2024 இல் திமுக, நிதிஷ் குமாரே வருக, போஜ்புரி ஆட்சியை தருக என சொல்லக்கூடிய அளவில் இருக்கிறது. இத்தனை அவமானத்திற்கு பின் திமுக இந்தியா கூட்டணி தூக்கிப்பிடித்தபடி இருப்பதற்கு காரணம் திமுகவின் இயலாமையே என தெரிவித்தார். மோடியின் சாதனை என்பது, ஏழ்மை என்ற வியாதியை சுத்தி வைத்து உடைக்கக் கூடிய ஒரு தலைவராக வந்திருக்கிறார். அதுதான் இந்த ஆட்சியின் சிறப்பு. நாம் ஆட்சிக்கு வரும் போது 2019 இல் வெறும் 17 சதவிகித வீடுகளுக்கு குழாய்களில் தண்ணீர் வந்தது, ஆனால் இன்றைக்கு அதன் எண்ணிக்கை 73 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. நாங்கள் எங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் என்னென்ன சொல்லி இருந்தோமோ , அதை எல்லாம் செய்து காட்டி இருக்கிறோம். அவை அனைத்தும் புள்ளி விவரங்களுடன் கணக்கில் இருக்கிறது.
திமுகவின் ஊழலுக்கு சர்க்காரியா சான்றிதழ்
குறிப்பாக வடக்கு எல்லாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது, தெற்கு தேய்ந்து கொண்டு இருக்கிறது என ஒன்றை சொல்வார்கள். ஒருமுறை உத்திர பிரதேச மாநிலம் விழித்துக் கொண்டால், மொத்த இந்தியாவும் வேறு ஒரு கோணத்தில் மாறும். அங்கு இருக்கிற மக்கள் தொகையில் கல்வி மட்டும் கொடுத்துவிட்டால், தமிழ்நாட்டிற்கு ஒரு பணியாளர் கூட கிடைக்க மாட்டார். உத்திரப்பிரதேசத்தில் 14 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து, 30 மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளாக உயர்ந்திருக்கிறது. திமுகவின் ஊழலுக்கு சர்க்காரியா கமிஷனிலே சான்றிதழ் கொடுத்துள்ளனர் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் திமுகவின் ஊழல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும். அந்த மாற்றத்தை பாஜகவால் மட்டுமே முடியும். தற்போது வரை திமுக பைல்ஸ் 3 பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. முழு அம்சமும் வெளியாகும் போது தமிழக அரசியல் மட்டுமல்ல தமிழக அரசே மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இன்னும் 14 பைல்கள் இருக்கு
இன்று நான் வெளியிட்ட டேப். டி ஆர் பாலு மற்றும் தமிழ்நாட்டை சீனியர் intelligent அதிகாரி ஒருவர் பேசிய 2 G விவகாரம் தொடர்பான உரையாடலை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். இன்னும் 14 டேப்புகள் இருக்கிறது. இந்த டேப் part 3 என்பது, தமிழ்நாடு அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒரு ஆழமான தாக்கத்தை உண்டு செய்யும். நாங்கள் நெட் பவுலர்களை சந்திக்க போவது இல்லை, நாங்கள் நெகராவை சந்திக்க தயாராக உள்ளோம் என தெரிவித்தவர், திமுக என்ற தீய சக்தியை தேர்தல் வாயிலாக ஒழித்து தோற்கடித்து தமிழக அரசில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் அதுதான் எங்களது ஒரே இலக்கு என அண்ணாமலை தெரிவித்தார்