அதானியை விமர்சனம் செய்த திமுகவினர் தற்போது பாராட்டுகிறார்கள் : அண்ணாமலை..!

சென்னையில் இரண்டு நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கோலாகலமாக நடைபெற்றது.

இதில் ஏரளமான உள்ளநாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பிரபல தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாட்டில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என முதலமைச்சர் எண்ணினார் .

 

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை அளிக்க வேண்டும் என்பதற்காக வரும் வாரத்திலும் கூடுதலாக சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்த மாநாட்டில் மொத்தம் ₹6,64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.இதில், தொழில்துறை, வர்த்தகம் ஆகியவற்றில் ₹3,79,809 கோடி முதலீடுகளும், ஆற்றல் துறைகளில் ₹1,35,157 கோடி முதலீடுகளும்,சிறு குறு தொழில் நிறுவனங்களில் ₹63,573 கோடி முதலீடுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இதுகுறித்து கூறியதாவது :

2023 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.33 லட்சத்து 51 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளது.தமிழ்நாட்டில் தற்போது நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடி எதிர்பார்த்தோம். ஆனால் ரூ.6.6 லட்சம் கோடி மட்டுமே வந்துள்ளது.

அதானியை விமர்சனம் செய்த திமுகவினர் தற்போது பாராட்டுகிறார்கள். தற்போது தமிழ்நாடு அரசு ரூ.6.6 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.

குஜராத் மாநிலத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடப்பதற்கு முன்பே ரூ.7 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு கையெழுத்திடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் தமிழ்நாடு அரசு குறிக்கோள்களை உயர்த்தி உழைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசை பாராட்டுகிறோம், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் ஏற்படும்.

மாநில அரசு அதானியை குறை கூறிக் கொண்டு ரூ.42,000 கோடிக்கான முதலீடுகளில் கையெழுத்திட்டுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *