இறந்தவர்கள் கனவில் அடிக்கடி வருகிறார்களா? அதற்கு இதுதான் காரணம்! தெரிஞ்சுக்கோங்க
மனிதர்களின் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் நாம் உறக்கத்தில் இருக்கும் போது கனவாக வெளிப்படுகின்றன. நாம் உறக்கத்தில் இருக்கும் போது கனவு வந்தால் அந்த கனவு ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் கண்டிப்பாக உள்ளது.
சிலரின் கருத்துப்படி கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என கூறுகின்றனர்.
இது எல்லாம் போக இறந்தவர்கள் கனவில் அடிக்கடி வந்தால் அந்த கனவிற்கான அர்த்தம் என்ன என்பதை இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
கனவுகள்
1.எமக்கு தெரிந்தவர்களோ! அல்லது நெருங்கிவரோ! இறந்து விட்டால் அவர்கள் மீண்டும் கனவில் வந்தால் நீங்கள் அதை அபசகுணம் என்று நினைத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இது போன்ற கனவு வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் உயிர் வாழ்வீர்கள் என்று பொருள். இறந்தவர்கள் உங்களை வந்து ஆசிர்வதிப்பது தான் அதற்கான காரணம்.
2.மேலும் இறந்த ஆத்மாக்கள் கனவில் வந்து அழுதால் அது நல்லது இல்லை நீங்கள் உடனே கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்தால் நல்லது.
நீங்கள் அவர்களுடன் பேசுவது போல கனவு கண்டால் உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்க போகிறது என்று பொருள்.
3.இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் வந்து உறங்குவதை போல கனவு வந்தால் நீங்கள் பெரிய ஒரு பிரச்சனையில் இருந்து தப்பிக்கபோறீர்கள் என்று அர்த்தம்.
சவப்பெட்டி கனவில் வந்தால் நமக்கு நெருங்கியவர்கள் விரைவில் இறக்கப்போகிறார்கள் என்று அர்த்தம்.
4.இறந்தவர்கள் உங்களுடன் சமமாக இருந்து உணவு உண்பதை போல கனவு கண்டால் நீங்கள் செல்வச்செழிப்புடன் வாழப்போகிறீர்கள் என்று அர்த்தம்.
மேலும் இது எல்லாம் விட்டு போக நாமே எமது கனவில் இறந்தது போல கனவுவந்தால் உங்களின் ஆயுள் கூடும் என்பது அர்த்தம். உங்களால் தீர்க்க முடியாத பிரச்சனையை நீங்கள் தீர்த்து வைப்பீர்கள்.
5.இறந்த போன தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறக்க போகிறது என அர்த்தம். நமக்கு மிகவம் நெருக்கமானவர்கள் இறப்பதை பொல கனவு கண்டால் இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது துன்பம் இருந்தால் இது உங்களை விட்டு விலகும்.