உடல் எடை குறைப்பவர்கள் காலை உணவை எப்போ சாப்பிடனும் தெரியுமா? மருத்துவரின் விளக்கம்
உணவு என்பது மனிதனின் அத்தியாவசியமான ஒன்றாகும். நேரத்திற்கு நேரம் உணவு எடுத்து கொள்வது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும்.
அந்த வகையில் உடல் எடை குறைப்பவர்கள் உணவு எடுத்து கொள்வதில் பெரும் அவஸ்தை படுவார்கள். நாம் எந்த வேளை உணவை தாமதித்தாலும் காலை உணவை ஒரு போதும் தாமதிக்கவும் கூடாது எடுக்காமல் விடவும் கூடாது.
இந்த நிலையில் எடை குறைப்பவர்கள் மற்றும் சாதாரணமானவர்கள் காலை உணவு எப்போது எடுத்து கொள்ள வேண்டும் என்பதை மருத்துவரின் விளக்கப்படி இந்த பதிவில் பார்க்கலாம்.
காலை உணவு
காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். காலை உணவை தவிர்க்கும் போது நமது உடல் தானாகவே ஆக்டிவ் இல்லாமல் போய்விடும்.
இதனால் உடலில் பல பிரச்சனைகள் உருவாகும். மருத்துவர் கூறும் போது ‘காலை உணவானது மிகவும் முக்கியமானது. நாம் இரவு முழுவதும் உறக்கத்தில் இருக்கும் போது எந்த உணவும் உட்கொள்ள முடியாது.
இரவு ஒரு 10 மணிக்கு பின் நமது வயிற்றில் எதுவும் இருக்காது கிட்ட தட்ட வயிறு 10 முதல் 12 மணி நேரம் வெறுமையாகத்தான் காணப்டுகின்றது.
அது உண்ணாவிரதம் இருப்பதற்கு சமமாகும். எனவே காலை 8 மணிக்கு முன்பே எதாவது ஒரு உணவை நாம் கட்டாயமாக உண்ண வேண்டும்.
இதை விட நீங்கள் உறக்கத்தில் இருந்து எழுந்த இரண்டு மணி நேரத்திற்குள் உணவு எடுத்து கொள்வது உடலுக்கு இன்னும் நன்மை தரும்.
காலை உணவை எடுக்காமல் விடும் சமயத்தில் அது பல நோய்களை உண்டாக்கும். இந்த விஷயத்தை உடல் எடை குறைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மற்றும் காலை உணவு எடுத்து கொள்ளும் போது புரத சத்து நிறைந்ததாகவும் கார்போஹைட்ரேட்டு நிறைந்த உணவையும் எடுத்து கொள்ள வேண்டும்’. என ஆலோசித்தார்.