பாலில் பூண்டை வேகவைத்து குடிக்க கூடாது..! ஏன் தெரியுமா ?
பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிக்கலாம். இதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.மறுபுறம் சிலருக்கு இவ்வாறு குடிப்பதால் பல உடல்நலப் பிரச்சனைகள் சந்திக்க நேரிடலாம். ஏனெனில் பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பாலுடன் சேரும் போது இவை ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே இப்போது நாம் பூண்டு பால் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று தெரிந்துக்கொள்வோம்
பாலில் பூண்டு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனைக் காணலாம்.
உங்களுக்கு திடீரென்று தீவிரமான சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலைக் குடியுங்கள். இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலைக் கொடுக்கும்.
பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.
ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.
மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
நீங்கள் முகப்பருவால் அதிகம் கஷ்டப்படுபவராயின், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.
நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இந்த பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால், விரைவில் நுரையீரல் அழற்சியை குணமாக்கலாம்.
பூண்டு பாலானது நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணமாக்க உதவும், செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.
பூண்டு கலந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்.
நாம் பூண்டு பால் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
கல்லீரல் பாதிப்பு
பூண்டுடன் பால் குடிப்பது கல்லீரலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஏனெனில் பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது இவை கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கும், எனவே பூண்டை பாலில் கலந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஸ்கின் அலர்ஜி
பூண்டுடன் பால் கலந்து குடித்தால் ஸ்கின் அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படக்கூடும். பூண்டில் உள்ள சத்துக்கள் வெடிப்புகளை உண்டாக்கும். இதன் காரணமாக, தோல் எரிச்சல், அரிப்பு மற்றும் சிவத்தல் போன்றவை ஏற்படலாம்.
இரத்த அழுத்தம்
பூண்டுடன் பால் குடிப்பதால் இரத்த அழுத்தம் மோசமடையும். ஏனெனில் பூண்டு பால் சில நேரங்களில் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
வயிற்றுப்போக்கு
பூண்டு பால் குடிப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படும். அதேபோல் வாயு பிரச்சனையும் ஏற்படக்கூடும். ஏனெனில் பூண்டில் நார்ச்சத்து உள்ளது, அதனுடன் பால் கலந்து குடிப்பது சில நேரங்களில் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் இந்த இரண்டையும் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
தலைவலி
பூண்டு பால் குடிப்பதால் தலைவலி ஏற்படலாம். பூண்டு மற்றும் பால் இரண்டும் தலைவலிக்கு காரணம் இல்லை என்றாலும், இந்த இரண்டு கலவை ஒன்றாக குடிப்பதால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.