இந்த பாயாசம் ஒரு முறை செய்து சாப்பிடுங்க: இதுக்கு முன்னாடி இதை டேஸ்ட் பண்ணிருக்க மாட்டீங்க
ஆப்பிள் வைத்து ஒரு நல்ல பாயாசம் இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
2 ஆப்பிள் தோல் நீக்கியது
5 ஏலக்காய் பொடித்தது
கால் கப் முந்திரி பருப்பு
கால் கப் பாதாம்
2 ஸ்பூன் நெய்
கால் கிலோ சர்க்கரை
500 எம்.எல் பால்
செய்முறை : பாலை காய்ச்ச வேண்டும். அப்பிளை துருவிக் கொள்ளவும். ஒரு பாந்திரத்தில் நெய் சேர்த்து முந்திரியை வறுத்து கொள்ள வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். தொடர்ந்து அந்த நெய்யில் ஆப்பிள் துருவியதை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து சர்க்கரையை சேர்த்து கிளரவும். தொடர்ந்து அடுப்பை அணைக்கவும். ஆறிய பாலை இதில் சேர்த்து கிளரவும். தொடர்ந்து ஏலக்காய் பொடியை தூவ வேண்டும். கலந்ததும். முந்திரியை சேர்க்கவும், பாதாமை சேர்க்கவும்.அடுப்பை ஆன் செய்து, சில நேரம் மிதமான தீயில் வைக்கவும்.