இன்று இதை செய்யுங்க ஏழு தலைமுறை பாவம் நீங்கும்..!
மாசி மாதம் இறை வழிபாட்டிற்கும், தான தர்மங்கள் செய்வதற்கும் ஏற்ற மாதமாக சொல்கிறார்கள். மாசி மாதத்தில் பெளர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை மாசி மகம் என கொண்டாடுகிறோம். இந்த சிறப்புமிக்க நாளில் என்னென்ன காரியங்களை செய்தால் நம்முடைய பாவங்கள் நீங்கி, அளவில்லாத புண்ணிய பலன்களை பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* மாசி மகத்தன்று அன்னதானம் வழங்குவது மிகவும் சிறப்பானதாகும். முடிந்த வரை இரண்டு நபர்களுக்காவது அன்னதானம் வழங்கலாம். மனிதர்களுக்கு உணவு வழங்க முடியா விட்டாலும் காகம், நாய், பூனை போன்றவற்றிற்கும் உணவு வழங்கலாம்.
* முன்னோர்களுக்கு மாசி மகத்தன்று நீர் நிலைகளுக்கு அருகில் வைத்து தர்ப்பணம் கொடுப்பதால் ஏழு தலைமுறையில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, நம்முடைய முன்னோர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன், நமக்கும் நன்மைகளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
* வருண பகவான், சிவ பெருமானை வேண்டி தன்னுடைய தோஷங்களில் இருந்து விடுபட்ட நாள் என்பதால் மாசி மகத்தன்று, சிவன் கோவிலுக்கு சென்று சிவ பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும். நம்முடைய வாழ்வில் இருக்கும் பல விதமான கஷ்டங்கள் நீங்கும்.
* மாசி மகத்தன்று பெண்கள் தாலி கயிற்றை மாற்றிக் கொண்டால் கணவரின் ஆயுள் பலம் அதிகரிக்கும்.
* மாசி மகம், மகாவிஷ்ணு அவதரித்த நாளாக கருதப்படுகிறது. இதனால் இந்த நாளில் மகாவிஷ்ணுவை துளசி இலைகளால் அர்ச்சித்து வணங்கினால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
* மாசி மகத்தன்று நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் இரண்டு மடங்கு பலனை தரும் என்பதால் தான, தர்மங்கள் செய்வதற்கு ஏற்ற நாளாகும். இந்த நாளில் நாம் செய்யும் தர்மங்களால் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.