வீட்டுல 2 குடைமிளகாய் இருக்கா.. அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும்…

இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போறீங்களா? அதற்கு சைடு டிஷ் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?

அதுவும் சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா?

அப்படியானால் அந்த குடைமிளகாயைக் கொணடு அசத்தலான சுவையில் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி இட்லி தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு குடைமிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* குடைமிளகாய் – 2

* கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் . 4

* சீரகம் -1 டீஸ்பூன்

* புளி – 1 துண்டு

* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 3/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் குடைமிளகாயை கழுவி, அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் கடலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, , அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

* அதன் பின் குடைமிளகாயை சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும். பின் தேங்காள் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்னர் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் வறுத்த பொருட்களையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி அரைத்து, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *