செல்போன் கையில் இருக்கா? உடனே இதை பண்ணுங்க.. பாதுகாப்பு எச்சரிக்கை!

ஆன்லைனில் ஆபத்து எப்படி வரும், எப்போது வரும் என்றே கணிக்க முடியாத காலம் இது. இந்த சூழலில், இந்திய அரசு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது இணைய பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான இந்திய யூசர்கள் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் அடிப்படையிலான போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த போன்களில் தான் தீங்கிழைக்கும் பக்ஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அரசின் கீழ் இயங்கும் CERT-In எனப்படும் இந்திய கணினி அவசரகால உதவிக் குழு தெரிவித்துள்ளது. சேமிப்பு, திரைப் பதிவு, ஃபைல் மேனேஜர், உள்நுழைவு, பிடிஎஃப், ஆட்டோ ஃபில் ஆகிய வசதிகளை நாம் பயன்படுத்தும் போது, அதனை ஹேக்கர்கள் அணுக அனுமதிக்கும் சில பக்ஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
“கட்டமைப்பு, சிஸ்டம், கூகுள் ப்ளே சிஸ்டம் புதுப்பிப்புகள், இமேஜினேஷன் டெக்னாலஜிஸ், மீடியாடெக் உதிரிபாகங்கள், யூனிசாக் பாகங்கள், குவால்காம் பாகங்கள் மற்றும் அதன் மூலக் கூறுகள் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த பாதிப்புகள் ஆண்ட்ராய்டில் உள்ளன,” என்று ஜனவரி 11 அன்று CERT-IN வெளியிட்ட தகவலில் குறிப்பிட்டிருந்தது.
மேற்குறிப்பிட்ட வன்பொருள் அல்லது மென்பொருள்களில் மிகவும் ஆபத்தான என்று அறியப்படும் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் இவற்றுடன் ஒன்றி இருப்பதால், அவை அனைத்திலும் பாதுகாப்பு குறைபாட்டிற்கான காரணிகள் இருக்கும் என்று அறியப்பட்டுள்ளது.
ஆபத்தில் இருப்பது பழைய ஆண்ட்ராய்டு பதிப்புகளான 11, 12, 12எல், 13 என்று நினைத்திருக்கும் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை இந்த குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய ஆண்ட்ராய்டு 14 யூசர்களுக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சாம்சங் போன்ற பெரிய நிறுவன பிரீமியம் ஸ்மார்ட்போன்களும் ஆபத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அனைவரும் தங்களின் ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயனர்களின் தனியுரிமை தகவல்களைத் திருட, இலக்கு வைக்கப்பட்ட போன்களில் மால்வேர் போன்ற வைரசுகளை உலாவ விட்டு, அதில் உள்ள தகவல்களைத் திருடுவதே இந்த பக்ஸின் வேலையாக இருக்கும் என்று அறிக்கையில் தெளிவுப்படுத்தியுள்ளது. இதனையடுத்து தங்கள் இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி பேட்சை புதுப்பித்துக்கொள்ளும்படி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு போனை புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
1. உங்கள் போனின் செட்டிங்ஸ் பக்கத்தைத் திறக்கவும்
2. இப்போது About பகுதிக்குச் சென்று ஆண்ட்ராய்டு வெர்ஷனை தெரிந்துகொள்ளவும்
3. தொடர்ந்து அப்டேட்ஸ் பகுதிக்குச் சென்று, (check for update) உங்கள் இயங்குதளத்திற்கு புதிய வெர்ஷன் ஏதேனும் வந்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும்
4. இல்லையெனில் புதிய வெர்ஷன் நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து வெளியேற வேண்டும்