கழிப்பறையில் செல்போன் பார்க்கும் பழக்கம் இருக்கா? உங்களை தேடி வரும் ஆபத்துகள்!
பொதுவாகவே அனைவரும் காலையில் எழுந்து கழிப்பறைக்கு செல்வது வழக்கம். ஆனால் தற்காலத்தில் கழிப்பறைக்குள் நுழையும்போது மொபைல் போனை கையில் எடுத்துச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
அந்த நேரத்தை கூட வீணாக்காமல் டாய்லெட்டில் உட்கார்ந்து மொபைல் போன் பயன்படுத்துவது மிக தீவிரமான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மொபைல் அதிகம் பயன்படுத்தினால் நிறைய ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
டாய்லெட்டில் உட்கார்ந்து மொபைல் போன் பார்த்துக் கொண்டிருப்பதால் வழக்கத்தை விட நீண்ட நேரம் அங்கே அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது.