வீட்டுக் கடன் இருக்கா.. இதை பயன்படுத்தி பணத்தை மிச்சம் பண்ணுங்கப்பா – section 24(b)

சொந்த வீடு கனவு யாருக்கு தான் இல்ல. சொந்த வீடு என்பது சமூக அந்தஸ்தா பார்க்கப்படும் இந்த காலகட்டத்துல , அந்த கனவை நிறைவேற்ற நமக்கு கை கொடுப்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்க கூடிய வீட்டுக் கடன்கள்.

இந்த வீட்டு கடனை அடைக்க நீங்கள் செலுத்தும் வட்டி தொகைக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்கிறது.பிரிவு 24B: இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24B, தனிநபர் ஓர் நிதியாண்டில் வீட்டு கடன்களுக்காக செலுத்தும் வட்டி தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கிறது.

இதன்படி ஒரு வீட்டை வாங்கவோ அல்லது கட்டுமான பணிக்காகவோ அல்லது சீர்ப்படுத்தவோ அல்லது வீட்டினை புனரமைக்கவோ வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய கடன்களுக்கு எதிராக செலுத்தப்படும் வட்டி தொகைக்கு வரிச் சலுகை கிடைக்கும்.

யாருக்கு கிடைக்கும்?ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டு கடன்களுக்கு செலுத்தும் வட்டிக்கு வரி விலக்கு கோரலாம் அந்த வீட்டு மனை அவர் பெயரில் இருக்க வேண்டும், கடனும் அவர் பெயரில் வாங்கி இருக்க வேண்டும்எப்படி கணக்கிடப்படும்?

பிரிவு 24B இன் கீழ் வரி விலக்கு என்பது உங்களின் கடன் தொகையின் அடிப்படையில் செய்யப்படுகிறது , அதாவது அந்த நிதியாண்டில் வட்டி முழுமையாக செலுத்தப்படாவிட்டாலும் வரி விலக்கு கிடைக்கும்.சுய ஆக்கிரமிப்பு சொத்துகளுக்கு அதிகபட்ச வரி விலக்கு ரூ.

2 லட்சம் ரூபாய் மற்றும் வீட்டினை வாடகைக்கு விட்டிருந்தால் அதிகபட்ச வரம்பு கிடையாது.அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெற்றிருந்தால் மட்டுமே இந்த பிரிவினை பயன்படுத்த முடியும்.

வீட்டு கடனின் வட்டி பகுதிக்கு மட்டுமே இந்த பிரிவில் வரிச் சலுகை கிடைக்கும், மூல தொகைக்கு இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்கவனிக்க வேண்டியவை:நீங்கள் வாங்கிய கடன் வீட்டுக் கடனாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

தனிநபர் கடன் வாங்கி அதை வீடு வாங்கவோ அல்லது கட்டவோ அல்லது புனரமைக்கவோ பயன்படுத்தினாலும் வரி சலுகை கிடைக்கும் என்பதே இந்த பிரிவின் சிறப்பு.நீங்கள் கடன் வாங்கிய நிதியாண்டின் முடிவில் இருந்து ஐந்து வருடங்களுக்குள் கட்டுமானத்தை முடிக்க வேண்டும்.

வாங்கிய கடன் மீது செலுத்த வேண்டிய வட்டி தொகையை உறுதிப்படுத்தும் வட்டி சான்றிதழ் உங்களிடம் இருக்க வேண்டும்.வீட்டுக் கடன் வாங்கியிருக்கீங்களா..

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *