உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா ? இனி ஆதார் கார்டு மட்டும் வைத்து ரூ.50,000 கடன் பெறலாம்..!

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கடனுதவி திட்டங்களை மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கி வருகிறது. அந்த வகையில் கொரோனா காலத்தில் சிறு வணிகர்களுக்கு பல்வேறு வசதிகளையும் அரசு ஏற்படுத்தி தந்தது.மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழில்களை நடத்த அரசிடம் கடன் பெறலாம். காய்கறி விற்பனையாளர்கள், பழங்கள் மற்றும் பூ விற்பனையாளர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் துரித உணவு விற்பனை நிலையங்களை நடத்துபவர்கள் இந்தக் கடனைப் பெறலாம்.இத்திட்டத்தில் சிறு தொழில் தொடங்க விரும்பும் நபர்கள் மத்திய அரசிடம் இருந்து கடன் உதவி பெற்றுக் கொள்ள முடியும். மேலும் கடன் தொகைக்கான மானியமும் மத்திய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பலனடைவதற்கு சிறு வணிகர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் துரித உணவு விற்பனை நிலையங்களை நடத்துபவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள்.

பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 50,000 ரூபாய் வரை கடன் வழங்குகிறது. ஆனால், 50000 ரூபாய் கடனைப் பெற முதலில் நீங்கள் வாங்கிய கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தி உங்கள் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும்.

முதலில் ரூபாய் 10 ஆயிரத்திற்கு மட்டுமே கடன் தொகை வழங்கப்படும். இதனை முறையாக செலுத்தும் பட்சத்தில் இரண்டாவது தவணையாக ரூபாய் 20,000 வழங்கப்படும். இவற்றை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தினால் ரூபாய் 50 ஆயிரத்திற்கான கடனுதவி கிடைக்கும். இந்த கடன் உதவியை பெறுவதற்கு வணிகர்கள் தங்களின் ஆதார் அட்டை மட்டும் வைத்திருந்தால் போதுமானதாகும். நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளின் வாயிலாகவும் ஸ்வநிதி யோஜனா திட்டத்திற்கான விண்ணப்பத்தை வணிகர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் மற்றொரு அம்சம் என்னவென்றால் இந்த கடன் அரசு மானியத்துடன் கிடைக்கிறது. ஸ்வநிதி யோஜனாவின் கீழ் கடனைப் பெற எந்த பிணையமும் தேவையில்லை. உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கடன் தொகை உங்கள் கணக்கிற்கு மாற்றப்படும். பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் கடன் பெற உங்களிடம் ஆதார் கார்டு இருந்தாலே போதும். வேறு எந்த ஆவணமும் தேவையில்லை.

நீங்கள் வாங்கிய கடனை ஓராண்டுக்குள் திருப்பி செலுத்தலாம். மாதாந்திர தவணையாகவும் திருப்பிச் செலுத்தும் வசதி உள்ளது. எந்த அரசு வங்கியிலும் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *