சிறுநீரக கல் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகள் பக்கமே போகாதீங்க!!

இன்றைய அவசர வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற ஊணவுமுறை காரணமாக பல நோய்கள் நம்மை எளிதில் ஆட்கொள்கின்றன. இவற்றில் சிறுநீரக கல் பிரச்சனையும் ஒன்று. சிறுநீரக கற்கள் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. சமீப காலங்களில் இந்தியாவில் சிறுநீரக கற்கள் உள்ளவர்களின் எண்ணிக்கை 3 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இவ்வாறான நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வும் உஷார் நிலையும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன (What are the Reasons for Kidney Stones?)

அசுத்தமான நீர் மற்றும் பான் மசாலாவை உட்கொள்வது சிறுநீரக கற்களை (2 செ.மீ.க்கு மேல்) ஏற்படுத்தும் என்று லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (கேஜிஎம்யு) சிறுநீரகவியல் மாநாட்டில் நிபுணர்கள் தெரிவித்தனர். KGMU இன் பேராசிரியர் அபுல் கோயல், “எங்கள் OPD க்கு வரும் நோயாளிகளில் சுமார் 70 சதவீதம் பேர் 2 செ.மீ.க்கு மேல் கற்கள் உள்ளவர்கள். இது பெரும்பாலும் பான் மசாலா பயன்பாட்டாலும், குறைந்த அளவில் நீர் குடிப்பதாலும், அசுத்தமான நீர் குடிப்பதாலும் ஏற்படுகின்றது” என்றார்.

சிறுநீரக கற்கள் பிரச்சனையை அதிகரிக்கும் உணவுகள் பற்றி இங்கே காணலாம்:

– சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அவற்றை அதிகம் உட்கொளவ்து ஆக்சலேட் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் காரணமாக சிறுநீரக கற்கள் அதிகரிக்கும். ஆகையால் சிறுநீரக கற்கள் பிரச்சனை இருந்தால் வைட்டமின் சி சப்ளிமெண்ட் சாப்பிடக்கூடாது.

– சோடியம்: அதிக உப்பு உள்ள உணவு சிறுநீரக கற்களின் நிலையை மோசமாக்குகிறது. அதிகப்படியான சோடியம் கால்சியம் உருவாவதை ஊக்குவிக்கிறது. ஆகையால், சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் நொறுக்குத் தீனி, பீட்சா, பர்கர் போன்றவற்றை உண்ணக்கூடாது, ஏனெனில் இவற்றில் உப்பூ காரம் அதிகமாக இருக்கும்.

– பாலக் கீரை: பாலக் கீரையில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளது. 100 கிராம் கீரையில் 1 கிராம் ஆக்ஸாலிக் அமிலம் உள்ளது. ஆக்ஸாலிக் அமிலம் ஆக்சலேட்டாக மாறி சிறுநீரக கற்களை உண்டாக்குகிறது. ஆகையால், சுறுநீரக கற்கள் உள்ளவர்கள் கீரையை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

– விலங்கு புரதம்: இறைச்சி, மீன், முட்டையில் அதிக அளவில் புரதம் உள்ளது. ஆனால் விலங்கு புரதம் யூரிக் அமிலத்தை அதிகரிக்கிறது. இது உடலில் இருந்து வெளிறுவது குறைந்தால், சிறுநீரக கற்களாக மாறுகின்றன. விலங்கு புரதம் உடலில் உள்ள சிட்ரேட்டைக் குறைக்கிறது. சிட்ரேட் சிறுநீரக கற்களை உருவாக்க அனுமதிக்காது.

– குளிர்பானங்கள்: சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் குளிர்பானங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது இந்த பிரச்சனையை அதிகமாக்கும். குளிர்பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் இருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாவதை இது மேலும் அதிகரிக்கிறது. ஆகையால், இவர்கள் குளிர்பானங்களை அதிக அளவில் உட்கொள்ளக் கூடாது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *