இந்த கிரெடிட் கார்டு இருக்கா? – தியேட்டரில் ஃப்ரீயா படம் பார்க்கலாம்!
இந்த கிரெடிட் கார்டை கோட்டக் மஹிந்திரா வங்கியும் திரையரங்குகளான பிவிஆர், ஐநாக்ஸ் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. இது ஒரு விசா கிரெடிட் கார்டு ஆகும். அதாவது அனைத்து வணிக விற்பனை நிலையங்களிலும், விசா கார்டுகளை ஏற்கும் ஆன்லைன் தளங்களிலும் இதை பயன்படுத்தலாம்.
அதன்படி, கோடக் பிவிஆர் – ஐநாக்ஸ் கிரெடிட் கார்டு மூலம் பயன்படுத்தும் ஒவ்வொரு 10,000 ரூபாய்க்கு ரூ.300 மதிப்புள்ள ஒரு திரைப்பட டிக்கெட் இலவசமாக கிடைக்கும். வாடகை மற்றும் வாலட் ரீலோட் ஆகிவற்றிற்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.10,000க்கும் கீழ் செலவிட்டால் டிக்கெட் இலவசமில்லை
ரூ.10,001 முதல் ரூ.20,000 வரை – 1 டிக்கெட்
ரூ.20,001 முதல் ரூ.30,000 வரை – 2 டிக்கெட்டுகள்
ரூ.30,001 முதல் ரூ.40,000 வரை – 3 டிக்கெட்டுகள்
ரூ.40,001 முதல் ரூ.50,000 வரை – 4 டிக்கெட்டுகள்
ரூ.50,001 முதல் ரூ.60,000 வரை – 5 டிக்கெட்டுகள்
இதர சலுகைகள் :
பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் உணவு மற்றும் பானங்களுக்கு 20% தள்ளுபடி.
ஒவ்வொரு திரைப்பட டிக்கெட் முன்பதிவிற்கும் 5% தள்ளுபடி.
- இந்த அட்டையில் சென்சார் தொழில்நுட்பம் உள்ளது. இதன் மூலம் பின் இல்லாமல் ரூ.5000 வரை பணம் செலுத்தலாம்.