ஒன்பிளஸ் இந்த மாடல் போன் உங்க கிட்ட இருக்கா..? முழு பணத்தையும் திரும்பி தரும் நிறுவனம்… காரணம் இதுதான்..!
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ள பிரபல சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ், உண்மையாகவே எங்கள் தயாரிப்பில் குறை இருப்பதாக நினைத்திருந்தால், போனை திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப்பெற்றுக் கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் பிபிகே நிறுவனத்திற்குக் கீழ் இயங்கும் ஒன்பிளஸ், பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டாக வலம் வருகிறது. இவர்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தனி வாடிக்கையாளர் பட்டாளமே உண்டு. சமீபத்தில் ஒன்பிளச் 12ஆர் பிரீமியம் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது கூறிய விவரம் ஒன்று தவறுதலாக போனதுதான், ஒன்பிளஸ் வருத்தம் தெரிவிப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. அதாவது, ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் UFS 4.0 ஸ்டாண்டேர்டு வெர்ஷன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிரத்யேக இணையதள பக்கத்திலும் இதே அம்சம்தான் இடம்பெற்றிருந்தது. ஆனால், அது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு திருத்தப்பட்டது.
இதற்காக ஒன்பிளஸ் கூறுவது என்னவென்றால், “தவறு நடந்துவிட்டது. அதனை தற்போது சரிசெய்து விட்டோம். ஆனால், இதை பார்த்து 12ஆர் மாடல் போனை வாங்கிய பயனர்களுக்கு ஏமாந்துவிட்டோம் என்ற வருத்தம் ஏற்பட்டிருந்தால், உடனடியாக அருகில் உள்ள சேவை மையத்தை அணுகி முழு பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம்,” என்று நிறுவனத்தின் தலைவர் கிண்டெர் லியூ தெரிவித்துள்ளார். ஒன்பிளச் 12ஆர் மொபைலின் 256ஜிபி வேரியண்டை வாங்கியவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். அதுவும் அவர்கள் மார்ச் 16, 2024 வரை மட்டுமே பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
ஒன்பிளஸ் 12ஆர் ஸ்டோரேஜ் பிரச்னை :
ஸ்டோரேஜ் செயல்திறனை அதிகரிக்க மென்பொருளில் செயல்படும் டிரினிட்டி எஞ்சினை ஒன்பிளஸ் தனது 12ஆர் ஸ்மார்ட்போனில் அறிமுகப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் இது புதிய UFS 4.0 ஸ்டோரேஜ் எனக் கருதப்பட்டது. அப்படியே இணையதளத்திலும் கொடுக்கப்பட்டிருந்தது. உண்மையில் போனின் ஸ்டோரேஜ் UFS 3.1 வேரியண்ட் ஆகும். எனினும், உடனடியாக செயல்பட்டு ஒன்பிளஸ் நிறுவனம் யூசர்களுக்கு பணத்தை திருப்பி வழங்குவதாகக் குறிப்பிடுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒன்பிளஸ் 12ஆர் போனில் 6.78 இன்ச் அமோலெட் எல்டிபிஓ சூப்பர் பிரைட் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. செயல்திறனுக்காக குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் நிறுவப்பட்டுள்ளது. 16ஜிபி வரை ஆதரவு தரும் LPDDR5X ரேம், UFS 3.1 ஸ்டோரேஜ் ஆகியவை இணக்கப்பட்டுள்ளன. பின்பக்கம் 50 மெகாபிக்சல் சோனி கேமரா முதன்மை சென்சாராக உள்ளது. பிற ஸ்மார்ட்போன்களில் இல்லாத அளவுக்கு இதன் பேட்டரி திறன் இருக்கும். ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனை 5,500mAh பேட்டரி சக்தியூட்டுகிறது. இதனை ஊக்குவிக்க 100 வாட் சூப்பர்வூக் சார்ஜர் போனுடன் கொடுக்கப்படுகிறது. கூல் ப்ளூ, ஐயன் கிரே ஆகிய இரு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.