அதுக்கு மட்டும் உங்களுக்கு டைம் இருக்கா?. அஜித்குமாரை கழுவி ஊற்றும் பிரபலம்.
தமிழ் சினிமாவில் தனக்கென எந்தவொரு விளாம்பரமும் தேடாதவர் நடிகர் அஜித்குமார். பொதுவாக இவர் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. தன்னுடைய படமே என்றாலும் அவர் அதற்காக எந்தவொரு விளம்பரத்தையும் தேடி கொள்வதில்லை.
தற்போது இவரின் இந்த செயல் பெரிய அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் இறப்பிற்கும் கூட அஜித் வரவில்லை. என்னதான் தான் எந்தவொரு விளம்பரத்தையும் விரும்பாதவர் என்றாலும் அஜித்குமார் இந்த நிகழ்வுக்கு வந்திருக்க வேண்டும் என பல நெட்டிசன்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அஜித்குமாருக்கு தல என்கிற பெயரும் ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தன்னுடைய பெயரை தல என உச்சரிக்க வேண்டாம் எனவும் மேலும் தன்னை அஜித்குமார் என அழைத்தாலே போதும் எனவும் சில வருடங்களுக்கு முன் அஜித் குமார் அறிவித்திருந்தார்.
தற்போது அவரின் இந்த பேச்சு பிரபலங்களிடையே விமர்சிக்கப்பட்டு வருகிறது. அப்போது தன்னுடைய பெயருக்காக வெளி உலகத்துடன் பேசிய அஜித் தற்போது சினிமாவில் தன்னை போன்ற சக நடிகரான விஜயகாந்தின் இறப்பிற்கு மட்டும் வர முடியவில்லையா என பல பிரபல யூடியூபரான வலைபேச்சு அந்தணன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் விஜய்யின் வளர்ச்சிக்கு விஜயகாந்த் மிகப்பெரியதளவில் பங்காற்றியவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் விஜய் விஜயகாந்த் இறப்பிற்கு இரவில்தான் வந்தார். அதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் விஜய் மீது பல வன்மத்தை காட்டியிருந்தனர்.
இந்நிலையில் இதுபோன்ற செயல்களினாலேயே பல நட்சத்திரங்களும் இது போன்ற பொது இடங்களுக்கு வருவதில்லை எனவும் இன்னொரு தரப்பு கருத்தினை தெரிவிக்கின்றன. எனினும் ரஜினி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் வருகை தந்த நிலையில் அஜித் வராதது மக்களிடையே அவர் மீது ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இதே அஜித் புதுவருடத்தை குடும்பத்துடன் ஜாலியாக அசர்பைசானில் கொண்டாடியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.