‘மனதில் தேவையற்ற சிந்தனைகள் வருகின்றதா?’ – நிபுணர் கூறும் டிப்ஸ்

பெரும்பாலும், சில சூழ்நிலைகள் அல்லது சொற்கள் அல்லது சில நபர்களால், மனதில் தேவையற்ற சிந்தனைகள் தூண்டப்படுவதாக நாம் உணரலாம். இது ஆழமாக வேரூன்றிய கடந்தகால கசப்பான அனுபவங்களிலிருந்து கிடைக்கலாம். அப்போது, நமது எதிர்வினைகளைக் கட்டுப்படுத்தும் விதம் நம்மை அமைதிப்படுத்தவும் ஓய்வெடுக்கவும் வைக்க உதவுகிறது.

“உங்கள் மனதில் எழும் தேவையற்ற சிந்தனைகளை, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது உங்களுக்குப் போராட்டமாக இருக்கிறது என்றால், ஒரு மனநல நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது முக்கியம்” என்று தெரஃபிஸ்ட் சதாஃப் சித்திகி கூறுகிறார். நாம் மனதளவில் தூண்டப்பட்ட பிறகு நம்மை அமைதிப்படுத்தவும்; நன்றாக உணரவும் ஐந்து படிநிலைகளை தெரஃபிஸ்ட் குறிப்பிடுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sadaf Siddiqi (@your.being)

ஓய்வு எடுங்கள்: மனதில் தேவையற்ற குழப்பங்கள் எழும்போது, அந்த நேரத்தில் நாம் என்ன செய்கிறோமோ அதை நிறுத்துவது முக்கியம். சமைப்பதாக இருந்தாலும் சரி, மின்னஞ்சல் எழுதுவதாக இருந்தாலும் சரி, புத்தகம் படிப்பதாக இருந்தாலும் சரி, நாம் எதையும் செய்வதை நிறுத்திவிட்டு நீண்டநேரம் ஓய்வு எடுக்க வேண்டும். அதனை அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாற்றுவது கடினம். ஆனால், நாம் முயற்சியை நிறுத்தக்கூடாது.

ஆழ்ந்த சுவாசம்: நாம் மூன்று ஆழமான மற்றும் மெதுவான சுவாசங்களை எடுக்க வேண்டும். இது மூளையில் அதிக ஆக்ஸிஜனின் சுழற்சிக்கு உதவுகிறது. அப்படி செய்வது மனதில் சஞ்சலங்களை நிர்வகிக்க உதவுகிறது. இது நரம்பு மண்டலத்திற்கு நாம் ஆபத்தில் இல்லை என்பதை அறிய உதவுகிறது. இது உடனடியாக நிகழ்காலத்திற்கு நம் மனதை திசை திருப்பவும்; நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை அறியவும் உதவுகிறது.

நீங்களே செக்-இன் செய்யுங்கள்: மனதில் குழப்பங்கள் ஏற்படுவது இயல்பு. அப்போது, அவற்றை நாம் கஷ்டப்பட்ட சங்கடப்பட்ட கடந்த கால அனுபவங்களுடன் தேவையில்லாமல் தொடர்புபடுத்திக்கொள்கிறோம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஆழமாக ஆராய்ந்து, நாம் உணர்ந்த அச்சுறுத்தல் அல்லது அதிர்ச்சியை நினைவில் வைத்துக்கொள்ள முயற்சிப்பது முக்கியம். நம்மை நன்கு புரிந்துகொள்வதற்கும் தேவையற்ற மனத்தூண்டுதல்களை நிர்வகிப்பதற்கும் அதிக சுய விழிப்புணர்வை உருவாக்குவது முக்கியம். அதன்மூலம் நன்மை, தீமைகளைப் பகுத்து அறிந்துசெயல்படமுடியும்.

உங்களை நீங்களே தேற்றிக் கொள்ளுங்கள்: மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும்போது, அதனைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, நாமே தனியாக இருந்து நம்மைத் தேற்ற முயற்சிக்க வேண்டும். அது சரிபார்ப்பாக இருந்தாலும் சரி, உறுதிமொழிகளாக இருந்தாலும் சரி, அதை நமக்கு நாமே கொடுத்துக்கொள்ள வேண்டும். நரம்பு மண்டலத்தை நம்மால் நிர்வகிக்க முடியும் என்பதை அறிய இது உதவும்.

வேண்டுமென்றே இருங்கள்: அடுத்த முறை நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு திட்டத்தையும் நாம் வைத்திருக்க வேண்டும். மனதில் குழப்பம் எழும்போது வெற்றிபெற்ற விஷயங்களை செய்வது முக்கியம். முற்போக்கான பாதையில் செயல்படவும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *